Load Image
dinamalar telegram
Advertisement

ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே துணிகரம்

சேலம்:சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே, ஏ.டி.எம்.,மை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
சேலம் லைன்மேட்டில் உள்ள போலீஸ் கமிஷனர், கட்டுப்பாட்டு அறை எதிரே, குகை மேல்நிலைப்பள்ளியை ஒட்டி, 'சவுத் இந்தியா' வங்கி ஏ.டி.எம்., உள்ளது. அங்கு நேற்று காலை 3:20 மணிக்கு, மர்ம நபர் கடப்பாறையுடன் சென்று உடைக்க முயன்றார்.அங்குள்ள, 'சென்சார்' கருவி மூலம், சென்னையில் உள்ள அதன் வங்கி மேலாளருக்கு, எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

அவர், 3:50 மணிக்கு, சேலம் மாநகர போலீசின் நுண்ணறிவு பிரிவு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.அன்னதானப்பட்டி ரோந்து வாகனம் சம்பவ இடத்துக்கு சென்றதும், உடைக்க முயன்ற நபர் தப்பிவிட்டார். அவர் விட்டுச்சென்ற கடப்பாறையை, போலீசார் பறிமுதல் செய்தனர்.ஏ.டி.எம்.,ல் பொருத்தப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, அந்த நபரை கண்டறிய போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement