Load Image
dinamalar telegram
Advertisement

செந்தில் பாலாஜி வழக்குகளில் விரிவான விசாரணை

சென்னை:போக்குவரத்து கழகங்களில் பணி நியமனம் பெற்று தருவதாக கூறி, மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளில் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த, 2011 - 15ம் ஆண்டில், அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார்.

மோசடி



அப்போது, போக்குவரத்து கழகங்களில் நடத்துனர், ஓட்டுனர்களை நியமிப்பதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி, பிரபு, சகாயராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு மாறிய செந்தில் பாலாஜி, 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மின்துறை அமைச்சரானார்.

உத்தரவு ரத்து



தனக்கு எதிரான மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனுக்கள் தாக்கல் செய்தார். இதில், ஒரு வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.இந்நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மற்ற வழக்குகள், நீதிபதி இளந்திரையன் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளில் விரிவான புலன் விசாரணை நடத்த உள்ளதாக, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை, வரும் 29க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement