Load Image
dinamalar telegram
Advertisement

மல்லல் பஞ்., தலைவர் வெற்றிசெல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு

ராமநாதபுரம்:'ராமநாதபுரம் மாவட்டம், மல்லல் ஊராட்சி தலைவர் உதயகுமாரின் வெற்றி செல்லாது' என, ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், மல்லல் ஊராட்சி தலைவர் பதவிக்கு, 2019ல் தேர்தல் நடந்தது. இதில், உதயகுமார், 851 ஓட்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட பழனிஜோதி, 849 ஓட்டுகளும் பெற்றனர்.இதனால், இரண்டு ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உதயகுமார் தலைவரானார்.
இந்நிலையில், வெளிநாட்டில் உள்ளவர்கள், இறந்தவர்களின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து ஓட்டளிக்க வைத்ததால், உதயகுமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி, ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், 2019ல் பழனிஜோதி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், மல்லல் ஊராட்சி தலைவர் தேர்தலில், உதயகுமாரின் வெற்றி செல்லாது என, நேற்று தீர்ப்பளித்தார்.நீதிமன்றத்தின் உத்தரவு நகல், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.உதயகுமார் கூறுகையில், ''ஜனநாயக முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு, மக்களால் தலைவராக தேர்வாகியுள்ளேன். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளேன்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement