Load Image
dinamalar telegram
Advertisement

ஆன்மிகம், பிராமணர்களை சீண்டாதீர்கள் சுந்தரவடிவேல் சுவாமிகள் எச்சரிக்கை

Tamil News
ADVERTISEMENT
கொடைக்கானல்:''ஆன்மிகத்தையும், பிராமணர்களையும் சீண்டும் போக்கை திராவிட கட்சிகள் கைவிட வேண்டும்,'' என கொடைக்கானலில் கூடலுார் விஸ்வ ஜோதி ஆசிரம சுவாமிசுந்தரவடிவேல் எச்சரித்தார்.
பிரதமர் மோடி 2024 தேர்தலிலும் வெற்றி பெற கொடைக்கானலில் அக். 7 ல் மகா பிரம்ம யாகம் நடத்த இடம் தேர்வு செய்ய வருகை தந்த அவர் கூறியதாவது: இந்தியாவில் 2 சதவீதம் பிராமணர்கள் உள்ளனர். இவர்களை திராவிட கட்சியினர் எதிரியாக நினைத்து சீண்டுகின்றனர். ஹிந்து மதம், ஆன்மிகத்தை கொச்சைப்படுத்துகின்றனர். தி.மு.க., இந்நிலைபாட்டை கையில் எடுத்துள்ளதற்கு லோக்சபா தேர்தலில் ஹிந்துக்கள் பதிலடி கொடுப்பர்.
தி.மு.க., எம்.பி., ராஜா ஹிந்துக்களை அவதுாறாக பேசியது குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டிக்காதது அக்கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக்குகிறது. எம்.பி.,க்கள் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் ஹிந்துக்கள், ஆன்மிகத்தை அவதுாறு செய்வது தி.மு.க., வை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாகும். தி.மு.க., பிரிவினைவாதத்தை துாண்டி வருவதை அனுமதிக்க முடியாது.

ஸ்டாலின் பேசி வரும் திராவிட மாடல் குறித்து அவருக்கே தெரியாது. அமைச்சர்களை முதல்வர் கண்டுகொள்ளாததால் இஷ்டம் போல் செயல்படுகின்றனர். அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையால் ஒரு விபத்து போன்று தி.மு.க., ஆட்சி பிடித்துள்ளது. ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டாலும் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement