Load Image
dinamalar telegram
Advertisement

ரூ 3.70 லட்சம் கையாடல் பில் கலெக்டர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் வரி வசூல் நிதி ரூ 3.70 லட்சத்தை கையாடல் செய்த பில் கலெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் பாளை மண்டலத்தில் உதயகுமார் 40, பில் கலெக்டராக உள்ளார். ஒரு ஓட்டல் உள்ளிட்ட கட்டடத்திற்கு ஓராண்டு வரி ரூ. 5 லட்சத்திற்கான கட்டணத்திற்கு மாநகராட்சி பெயர் குறிப்பிடாத வெற்று காசோலை வாங்கி தனது வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்.

ரூ. 1.30 லட்சம் மட்டும் மாநகராட்சி கணக்கில் செலுத்தியவர் மீதமுள்ள ரூ 3.70 லட்சத்தை கையாடல் செய்தார். விசாரித்த மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நேற்று உதயகுமாரை 'சஸ்பெண்ட்' செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement