Load Image
dinamalar telegram
Advertisement

தேர்தல் நடத்தை விதிகள் இப்போதே அமல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அதிருப்தி

விருதுநகர்:தமிழகத்தில் 2023ல் நடக்க உள்ள கூட்டுறவு சங்க தேர்தலுக்கான நடத்தை விதிகள் இப்போதே அமலுக்கு வந்துள்ளன. தீபாவளி நெருங்குவதால் ஈவுத்தொகை உள்ளிட்ட நிதி சலுகை பெற முடியாமல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றிற்கான தேர்தல் 2023ல் நடத்தப்பட உள்ளது. கூட்டுறவு சங்க தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் செப். 20 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நடத்தை விதிகளால், தீபாவளி நேரங்களில் நடத்தப்படும் பொது பேரவை கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்க உறுப்பினர்களுக்கு ஈவுத்தொகை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஊதிய உயர்வு, நிலுவை தொகை போன்ற எவ்வித புதிய நிதி சலுகைகளையும் ஊழியர்களுக்கு வழங்க இயலாது. இதன் காரணமாக கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். எனவே தீபாவளிக்கு பின் தேர்தல் நடத்தை விதியை அமல்படுத்த அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement