Load Image
dinamalar telegram
Advertisement

குண்டு வெடிப்புஏழு பேர் பலி

காபூல்,:ஆப்கானிஸ்தானில், மசூதி அருகே கார் வெடிகுண்டு வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயம் அடைந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி நடக்கிறது. தலைநகர் காபூலில் உள்ள மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் நேற்று குவிந்தனர். தொழுகை முடிந்து மக்கள் கூட்டமாக வெளி வருகையில், மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில், சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.இதில் ஏழு பேர் உயிரிழந்தனர்; 41 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement