Load Image
dinamalar telegram
Advertisement

அரசின் மெத்தனப்போக்கு பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை:பரம்பிக்குளம் அணையை சரியாக பராமரிக்காத தி.மு.க., அரசுக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:மேற்கு தொடர்ச்சி மலையில் கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணையை, தமிழக அரசு பராமரித்து வருகிறது. தற்போது, அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து, 20 ஆயிரம் கன அடி தண்ணீர், வீணாக கடலில் கலக்கிறது.அணையின் முழு கொள்ளளவும் வீணாகும் சூழ்நிலை உருவாகி இருப்பது, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு, தி.மு.க., அரசின் மெத்தனப்போக்கே காரணம் என, விவசாயிகள் கூறுகின்றனர்.மதகு உடைப்பால், இந்த ஆண்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் வராது.தென்மேற்கு பருவ மழை முடிந்த நிலையில், இந்த ஆண்டு, இனிமேல் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால், பரம்பிக்குளம் அணைக்கு நீர் வரத்து வாய்ப்பில்லை என்றும், அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பொதுவாக, மழை இல்லாத காலத்தில், அணை பராமரிப்புப் பணிகளை, பொதுப்பணித் துறை செய்ய வேண்டும். தி.மு.க., அரசு சரியாக செய்யாததால், பரம்பிக்குளம் அணை பிரதான மதகு உடைந்துள்ளது.பரம்பிக்குளம் அணை பிரதான மதகில் ஏற்பட்டுள்ள உடைப்பை, உடனடியாக சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement