Load Image
dinamalar telegram
Advertisement

ஐ.என்.எஸ்., தலைவராகராஜ பிரசாத் ரெட்டி தேர்வு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி,:இந்திய பத்திரிகைகள் சங்க தலைவராக 'சாக்ஷி' நாளிதழின் கே.ராஜ பிரசாத் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐ.என்.எஸ்., எனப்படும் இந்திய பத்திரிகைகள் சங்க ஆண்டு கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. இதில், 2022 - 2023ம் ஆண்டுகான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தலைவராக சாக்ஷி நாளிதழின் கே.ராஜ பிரசாத் ரெட்டி, துணைத் தலைவராக ஆஜ் சமாஜின் ராகேஷ் சர்மா, உதவி தலைவராக மாத்ருபூமியின் எம்.வி. ஷ்ரேயம்ஸ் குமார், கவுரவ பொருளாளராக அமர் உஜாலாவின் தன்மய் மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நிர்வாக குழு உறுப்பினர்களாக 'தினமலர்' நாளிதழின் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, 'ஹெல்த் அண்டு ஆன்டிசெப்டிக்' பத்திரிகையின் எல்.ஆதிமூலம், தினத்தந்தியின் எஸ்.பாலசுப்ரமணியம் ஆதித்தன், தினகரனின் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தி இந்தியன் எக்ஸ்பிரசின் விவேக் கோயங்கா, சாகல் நாளிதழின் பிரதாப் ஜி பவார் உட்பட 41 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement