Load Image
dinamalar telegram
Advertisement

இலங்கையில் ரூ.40 லட்சம் கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம்:தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை -இலங்கையில் அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பெட்டியாவில் காரில் கடத்தி சென்ற 150 கிலோ கஞ்சாவை அந்நாட்டு போதை தடுப்பு பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த இரு இலங்கை கடத்தல்காரர்களை கைது செய்தனர். மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதியில் இரு டூவீலரில் கடத்திய 80 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படை, ராணுவம் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

இவற்றின் இலங்கை மொத்த மதிப்பு ரூ. 40 லட்சம்.இந்த கஞ்சாவை நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் கடலோர பகுதியில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் கடத்தி சென்று அந்நாட்டு கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மரைன் போலீசார், கடலோர காவல்படையினரின் அலட்சியத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்கிறது. இதனால் கடல் வழி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement