Load Image
dinamalar telegram
Advertisement

பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை மாணவிகள் அவதி

பெரியபட்டினம் : ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.

பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை 340 மாணவர்கள், 442 மாணவிகள் என 782 பேர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 16 ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி இல்லாத நிலை தொடர்கிறது. 6 கழிப்பறைகள் உள்ள நிலையில் இடைவேளையின் போது ஒரே நேரத்தில்மாணவிகள் கூட்டமாக செல்வதால் சிரமப்படுகின்றனர்.

பெரியபட்டினத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்பைரோஸ்கான் கூறுகையில், மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கான இட வசதியும் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கழிப்பறை செல்ல முடியாததால் மாணவிகள் பெற்றோரிடம் கூறி அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.எனவே, மாணவிகள் நலன் கருதி தூய்மை பாரத இயக்க ஊரக திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement