Load Image
dinamalar telegram
Advertisement

விபத்தின்றி விடியாது பொழுது

Tamil News
ADVERTISEMENT
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போதெல்லாம் 'விபத்தின்றி விடியாது பொழுது,' என்றாகிவிட்டது.


வாகன ஓட்டிகளின் அலட்சியம், போதிய கண்காணிப்பின்மை, நெரிசல் மிகுந்த இடங்கள், முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை, போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல விதிமீறல்கள் விபத்து அதிகரிக்க காரணமாக உள்ளது.ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம்--திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம் நகர் பகுதியிலும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


'பீக் அவர்' எனப்படும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் காலை, மாலை நேரங்களில் நடைபெறும் விபத்துக்கள், தேசிய நெடுஞ் சாலைகளில் அதிவேகமாக கட்டுபாடின்றி செல்லும் வாகனங்கள், சாலை விதிகளை பின்பற்றாமல் அலட்சியம் செய்யும் வாகன ஓட்டிகளால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன் அப்பாவி பொதுமக்களும் பாதிக்கப்படுவது மிகவும் கொடுமை.

ராமநாதபுரம் நகரில் நெரிசல் மிகுந்த முக்கிய பகுதிகளாக புது பஸ்- ஸ்டாண்ட் அருகில் சிக்னல் செயல்படாத நிலையில் சில நேரங்களில் மட்டும் போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அங்கு எவ்வித கட்டுபாடின்றி வாகனங்கள் செல்கின்றன. இதேபோல் மதுரை ரோட்டில்சாலை தெரு, வழிவிடு முருகன்கோயில், பாலத்தின் சர்வீஸ் ரோடு, கலெக்டர் அலுவலகம் முன்பு அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.


இந்த பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். முக்கிய வீதிகளில் போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனை தேவை. குறிப்பாக மது அருந்தி விட்டு டூவீலர் ஓட்டுவது, ெஹல்மெட் அணியாதவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதே போல் ஆட்டோ, கார் டிரைவர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்.


அலைபேசியில் பேசிக் கொண்டு ஓட்டுவோர் தண்டிக்கப்படாமல் இருப்பதும் விபத்துக்களுக்கு காரணமாகிறது. ஆட்டோக்களில் அதிகளவில் ஏற்றுவது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும். இது போன்ற விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement