Load Image
dinamalar telegram
Advertisement

நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சியின் போது அலாரம் அடித்ததால் பணம் மற்றும் நகைகள் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது.

ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை சாந்தி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே தனியார் ராஜபாளையம் பெனிபிட் பண்ட் நிதி நிறுவனம் உள்ளது. நள்ளிரவில் கொள்ளை கும்பல் உள்ளே நுழைந்து சி.சி.டி.வி., கேமராக்களை உடைத்து கேஸ் வெல்டு மூலம் பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முயற்சித்துள்ளனர்.எதிர்பாரா விதமாக அலாரம் அடித்ததால் அனைத்தையும் விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளனர். வழக்கம்போல் காலை அலுவலக ஊழியர்கள் வந்த போது கதவு திறந்து கிடந்ததை கண்டு தெற்கு போலீசில் தகவல் கொடுத்தனர்.குற்றப்பிரிவு போலீசார் கைரேகை மற்றும் இதர தடயங்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement