Load Image
dinamalar telegram
Advertisement

எடியூரப்பா ஊழல் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை

Tamil News
ADVERTISEMENT
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த, அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.எடியூரப்பா கர்நாடகா முதல்வராக இருந்த போது, அரசு பணிகள் செய்ய ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக, பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் செய்திருந்தார்.'புகாரை விசாரிக்க முகாந்திரம் இல்லை' எனக் கூறி சிறப்பு நீதி
மன்றம் புகாரை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து, ஆப்ரஹாம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரிக்கும்படி லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டது.
Latest Tamil News
இதன்படி, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார், எடியூரப்பா, அவரது மகன், மருமகன்கள், பேரன், ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவன இயக்குனர் சந்திரகாந்த் ராமலிங்கம் உட்பட ஒன்பது பேர் மீது கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் சந்திரகாந்த், தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் உறவினர்.எடியூரப்பா, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோஹ்லி அமர்வு, எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தனர்.அதேநேரத்தில், 'எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உட்பட மற்ற எட்டு பேர் மீது விசாரணையை தொடரலாம்' எனவும் உத்தரவிட்டனர். - நமது நிருபர் -


வாசகர் கருத்து (13)

  • Nagar Narayanan - doha,கத்தார்

    எடியூரப்பாவுக்கு எதிராக சதி செய்தவர்கள் மண்ணை கவ்வினார்

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    நீதிமன்றங்களுக்குள்ளேயே ஏன் இத்தனை வேறுபாடு? அதனால்தான் அ.வியாதிகள் தொடர்ந்து தைரியமாக ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    விசாரணை செய்யலாமாம் ஆனால் வழக்கு பதியக்கூடாது... நல்லாயிருக்கு ஒங்க தீர்ப்பு... இதுக்கு ஒரு பெஞ்ச்... எங்க ஊரு நாட்டாமை மர சேர்ல சொம்போட குத்திக்கிட்டு இதோட சூப்பரா சொல்வாப்ல...🙄🙄

  • M.Selvam - Chennai/India,இந்தியா

    தமிழகம் தாண்டியும் இவர்கள் ஊழல் பரவி உள்ளது.. இவர்களோடு ஊழல் ஒழிப்பதாக பீலா விடும் தேசிய கட்சி கூட்டு.. நல்லா வருவாங்க..

  • ThiaguK - Madurai,இந்தியா

    அங்கே இருக்கார் போல

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement