Load Image
dinamalar telegram
Advertisement

விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

சோமனுார்:மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடந்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி, கடந்த, 16 முதல் கோவை, திருப்பூர் மாவட்டத்தில், கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வந்தது.
கடந்த, 20ம் தேதி கூட்டமைப்பு நிர்வாகிகள் சென்னையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து, மின் கட்டணத்தை குறைத்து, தொழிலை பாதுகாக்க வலியுறுத்தினோம். முதல்வருடன் பேசி, நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். அதன்படி, எட்டு நாட்களாக நடக்கும் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்கிறோம்.மேலும், 10ம் தேதி முதல் உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை, மறு அறிவிப்பு வரும் வரை செலுத்துவதில்லை என, முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement