Load Image
dinamalar telegram
Advertisement

ஊரப்பாக்கத்தில் மருத்துவ முகாம் 200 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை

Tamil News
ADVERTISEMENT
கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட முழுதும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, -கூடுவாஞ்சேரி நகராட்சி ஊரப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை இணைந்து, பொது மருத்துவ முகாமை நேற்று நடத்தின.
ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவர் பவானி ஏற்பாடில், சுகாதாரத் துறை வட்டார மருத்துவர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர் முத்து தியாகராஜன், மருத்துவர் தனசேகரன் தலைமையில் முகாம் நடந்தது. காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடந்த முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, பொது மக்களுக்கு மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், வருகை தந்த அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
வட்டார மருத்துவ ராஜேஷ் கூறியதாவது:தற்போது நிலவி வரும் காய்ச்சல், தலைவலி, இருமல் உள்ளிட்ட நோய்களால் யாரும் அச்சப்படத் தேவையில்லை.இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை, இப்பிரச்னைகள் இருக்கும். மருத்துவரை அணுகி முறையான சிகிச்சைகள் பெற்றால் சரியாகிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement