Load Image
dinamalar telegram
Advertisement

மன்னர் உடைவாள் ஏந்தி நவராத்திரி பவனி புறப்பட்டது தமிழக-கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

Tamil News
ADVERTISEMENT
நாகர்கோவில்:மன்னர் உடைவாள் ஏந்தி பத்மனாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி நேற்று காலை புறப்பட்டது. இதில் தமிழக - கேரள அமைச்சர்கள் பங்கேற்றனர்.
திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் கவியரசர் கம்பர் வழிபட்ட சரஸ்வதிதேவி கோயில் உள்ளது. மன்னர் காலத்தில் இங்கு நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட போது, மன்னர் உத்தரவில் சரஸ்வதி விக்ரகம் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

மன்னர் காலத்துக்கு பின்னரும் இந்த மரபு மாறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.செப்.26 நவராத்திரி விழாவுக்காக நேற்று காலை பத்மனாபபுரத்தில் இருந்து பவனி புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட யானை மீது சரஸ்வதி விக்ரகம் ஏற்றப்பட்ட போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர்.

பல்லக்கில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை எழுந்தருளினர். அரண்மனை முன்புறம் வந்ததும் பவனியில் செல்பவர்களுக்கு 'பிடிகாணிக்கை' (கை நிறைய நாணயம்)வழங்கப்பட்டது. தொடர்ந்து பவனி புறப்பட்டது.

முன்னதாக அரண்மனை உப்பிரிகை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மன்னர் உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார், கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் வழங்க அவர் அதை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கொடுத்தார்.

அவர் குமரி மாவட்ட தேவசம்போர்டு இணைஆணையர் ஞானசேகரிடம் ஒப்படைத்தார். இந்த வாளை தேவசம்போர்டு ஊழியர் பவனியில் எடுத்து சென்றார். குழித்துறையில் தங்கிய பவனி, இன்று கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் தங்கி நாளை திருவனந்தபுரம் சென்றடையும். செப். 26 நவராத்திரி பூஜை தொடங்கும். இரு மாநிலங்களை இணைக்கும் பண்பாட்டு நிகழ்ச்சியாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement