ADVERTISEMENT
திருப்பூர்:திருப்பூரில், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த இரு நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், கொங்கு நகர் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ராயபுரத்தில் சோதனை மேற்கொண்டனர். நைஜீரியர்கள் சிலரிடம், பாஸ்போர்ட் மற்றும் விசா குறித்து ஆய்வு செய்தனர். அதில், நைஜீரியாவைச் சேர்ந்த பைரியான்வு, 46, ஒலிசக்வு சுக்ஸ் டேவிட், 47 ஆகியோர் பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருப்பது தெரிந்தது.
இவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட இருவரிடம் முறையான ஆவணங்கள் இல்லை. இருவருக்கும் பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. இருவரும் புதுப்பிக்காமல் முறைகேடாக தங்கியிருந்தது தெரியவந்தது'என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!