இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வந்துள்ள பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பிற்பகலில் சிவகங்கை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பூத் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் மாலை
நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் ஒரு புண்ணிய பூமி. இங்கு வரும்போதெல்லாம் புத்துணர்ச்சி கிடைக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை நம்பி சிறப்பான ஆட்சி தருகிறார். வளர்ச்சியை கருத்தில் கொண்டு உழைத்து வருகிறார். வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்துகிறோம். பா.ஜ., ஆட்சியில் நாடு வரலாறு காணாத அளவு வளர்ச்சி பெற்றுள்ளது.
தமிழகத்தில் பாஜ., வளர்ச்சி பெறுவதை கண்கூடாக பார்க்கிறேன். பல்வேறு கட்சி நிர்வாகிகள் பா.ஜ.,வில் இணைய தயாராக உள்ளனர். பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டுள்ளேன்.மத்தியில் தமிழகத்தின் பங்கேற்பு இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்களின் பிரச்னையை திமுக அரசு புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது. திமுக.,வின் மொத்த கலாசாரமே ஊழல் தான். அக்கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. மோசமான அரசியலை வழிநடத்துகிறது. வாரிசு அரசியல், பண விநியோகம், கட்டப்பஞ்சாயத்து அரசியலை திமுக செய்கிறது. தமிழகத்தில் பா.ஜ., கால் ஊன்றும் என நம்புகிறேன். இவ்வாறு நட்டா கூறினார்.
வாசகர் கருத்து (33)
நட்ட செங்கல்லை கூட உதை ஆட்டையை போட்டா எய்ம்ஸ் எங்கிருந்து 😇வரும்? அந்த திட்டமே வேண்டாத வேலை. ஏற்கனவே இருக்கும் மருத்துவக் கல்லூரியை உருப்படியாக நடத்தினால் போதும். வீம்புக்கு ஜல்லிக்கட்டு மாட்டிடம் குத்துவாங்கி விட்டு இலவச சிகிச்சைக்கு ராஜாஜி ஆஸ்பத்திரியில் ICU வை நிரப்புவது. இதுதான் இந்த எய்ம்சிலும் தொடரும். எய்ம்ஸ் மோதி மதுரைக்கு செய்யும் பாதகம்.
பாஜக தேசிய தலைவர் அவர்கள் இப்போது தான் கட்சியின் தலைவராக உள்ளார் ஆனால் ஸ்டாலின் ஐயா அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கட்சியை வழிநடத்துபவராக உள்ளார். குறை சொல்வது எளிது.
பார்ப்போம், தமிழகத்தில் நீங்கள் காலூன்றுகிறீர்களா இல்லை நாங்கள் உங்கள் காலை உடைத்து டெல்லிக்கு திருப்பி அனுப்புகிறோமா என்று 2024 பாராளுமன்ற தேர்தலில் தெரியும்!
யார் இவர் ? என்ன தெரியும் இவருக்கு ? மதுரையில் இன்னும் அய்ய்ம்ஸ் சுற்று சுவருடன் நிற்கிறது, இதில் இவர் 95% வேலை முடிந்து விட்டது என்கிறார். இவர் ஒருத்தர் பொதும், பி. ஜே. பி யை காலி பண்ண, இதில் ஆ.தி. மு க ஆதரவை பெற்று அவர்களையும் அதோ கத்தி ஆக்குவதற்கு . பாவம்.
இதை எதிர்க்கட்சி எம் எல் ஏ க்களை மொத்தமாக விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் செய்யும் நீங்கள் சொல்கிறீர்களா?