Load Image
dinamalar telegram
Advertisement

கடன் செயலிகளில் இந்த தகவல் இருக்கிறதா என பார்த்து பயன்படுத்துங்கள்!

Tamil News
ADVERTISEMENT
இந்திய பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ள கடன் செயலிகள் எந்த வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்துடன் (NBFC) கூட்டு வைத்து கடன் வழங்குகின்றன என்ற தகவலை கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று கூகுள் கூறியுள்ளது. செப்., 19 முதல் அவை அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனை தெரிவிக்காத செயலிகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கடன் செயலியை பயன்படுத்தும் முன் அத்தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


சமீபமாக கடன் செயலிகள் குறித்த சர்ச்சைகள் செய்திகளில் அடிபடுகின்றன. சீன நிறுவனங்கள் கடன் செயலி துறையில் நுழைந்து கந்துவட்டி வாங்கியதாக தகவல் வெளியானது. பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தி அது போன்ற நிறுவனங்கள் களையெடுக்கப்பட்டன. இந்திய கடன் செயலிகளும் கடன் தந்துவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாத போது கடன் வாங்கிய நபர் தற்கொலை செய்துகொள்ளும் அளவு டார்ச்சர் செய்வதாக புகார் கிளம்பியது. இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடன் செயலிகளை ஒழுங்குபடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூகுள் நிறுவனத்துடன் கூட்டங்கள் நடத்தியது.


கடன் செயலிகள் 30% வட்டி வசூல் செய்கின்றன. கடனுக்கான பிராசசிங் கட்டணம் என்ற பெயரில் 1 சதவீதம் எடுத்துக்கொள்கின்றன. அது தவிர தவனை தவறும் போது மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்துடன் இணைந்து அனைத்து கடன் செயலிகளும் பின்பற்ற வேண்டிய விரிவான சட்ட வழிகாட்டுதல்களை முன்மொழிந்துள்ளது. கூகுள் நிறுவனமும் தங்கள் தளத்தில் உள்ள அனைத்து கடன் செயலிகளும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச காலம், வட்டி விகிதங்கள் மற்றும் பிற செலவுகள் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளது.


அதில் ஒரு முன்னேற்றமாக செப்., 19 முதல் கடன் செயலிகள் எந்த வங்கி அல்லது வங்கியல்லாத நிதி நிறுவனங்களுடன் இணைந்து கடன் வழங்குகின்றன என்பதற்கான தகவல் மற்றும் இணைப்பை வழங்க வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த இணைப்பு மூலம் எந்தெந்த வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுடன் கடன்ச் செயலி இணைந்துள்ளது என்பது தெரியும். மேலும் வங்கி அல்லது என்.பி.எப்.சி., அங்கீகரித்த அனைத்து கடன் செயலிகளையும் அதில் பார்க்கலாம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement