சென்னை: பா.ஜ., அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும், அதனை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர் எனக்கூறியுள்ளார்.

மேட்டுப்பாளையம் இரண்டு பிளைவுட் கடைகளில் பெட்ரோல் குண்டு மற்றும் பெட்ரோல் பாக்கெட்டுகள் வீசப்பட்டன. சேதம் ஏதும் இல்லை. போலீசார், வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். இதனால், மேட்டுப்பாளையத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கோவை மாவட்ட பாஜ., அலுவலகத்தில் மீது வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு, நம் சகோதர, சகோதரிகளை ஒரு போதும் தடுக்காது. மாறாக நமது நாட்டிற்கும், சமூகத்திற்கும் எதிரான இந்த சக்திகளுக்கு எதிராக, போராடுவதற்கு நமக்கு பலத்தை அளிக்கும். பா.ஜ., அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசி எங்களின் மன தைரியத்தை குறைத்துவிடலாம் என நினைத்து விட வேண்டாம்.
இதுபோன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தில் சட்டம் ஒழங்கை சீரழிந்து வருவதை திமுக அரசு உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (39)
11:07 amராஜாவைப் பற்றி பேசிய பிறகுதான் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறதுஆகையால் திருட்டு திமுக வில் தான் இதுபோன்ற கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்கின்றது இவர்களால்தான் சட்டம்-ஒழுங்கு இது போன்று மாறி இருக்கிறது இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் இதுபோன்ற பொறுப்பில் உள்ளவர்கள் அல்லது உறுப்பினர்களை உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தாங்கள் முன்னாள் போலீஸ்காரர், உண்மையிலே எந்த எந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சுமாராக உள்ளது என்று தெரியும். நீங்களே உண்மையை மறைத்து பேசலாமா.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க நல்ல வாய்ப்புக்கிடைத்தும் திறன்மின்மையால் விட்டுவிட்டு வந்தவனெல்லாம் சட்டம் ஒழுஙக்ப்பற்றி பேசவந்திட்டானுக. கற்றக்கல்வி பெற்றப்பதவி இவை இரண்டையும் பயன் படுத்தாதவர்கள் கல்வி கொடுத்தும் விரயமானவர்கள். Simply Annamalai a wastage in education
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்குவதே பா. ஜ., தானே!
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. கூவிக்கூவி சேர்த்த ரௌடிகளின் பலன் தெரியத்துவங்கியுள்ளதா?