Load Image
dinamalar telegram
Advertisement

மதுரை, புதுச்சேரியில் சதம் அடித்த வெயில்



சென்னை : மதுரையிலும் புதுச்சேரியிலும் நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, தென் மேற்கு பருவ மழை காலம் நிலவுவதால், கேரளா, கர்நாடகாவை ஒட்டிய, தமிழக மலைப் பகுதி மாவட்டங்களில், மூன்று மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. மற்ற மாவட்டங்களில், அவ்வப்போது மிதமான மழை பெய்தது.இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து, தென் மேற்கு பருவ மழை விலகி வரும் நிலையில், தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
பருவ மழை குறைவால், நேற்று மூன்றாம் நாளாக மாநிலம் முழுதும் வெப்ப நிலை கணிசமாக உயர்ந்தது. நேற்றைய பகல் நேர வெப்ப நிலை உச்சத்துக்கு சென்றது.மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரையில், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
மதுரை விமான நிலைய பகுதியில், 101 டிகிரி பாரன்ஹீட் அளவான, 38.4 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு, வெப்ப நிலை பதிவானது. புதுச்சேரியிலும், 100 டிகிரி பாரன்ஹீட்டான, 38 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. சென்னை, நாகை, 37; கடலுார், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சி, வேலுார், திருத்தணி, கரூர் பரமத்தி, 36; நாமக்கல், 35; சேலம், 34; கோவை, 33; ஊட்டி, 20; கொடைக்கானல், 19 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது.
அடுத்த இரண்டு நாட்களை பொறுத்தவரை, சென்னை உட்பட சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement