Load Image
dinamalar telegram
Advertisement

வட அயர்லாந்து கடலில் 35 கி.மீ., நீந்தி தேனி மாணவர் சாதனை

Tamil News
ADVERTISEMENT
தேனி : தேனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் சினேகன், வட அயர்லாந்து நாட்டின் வடக்கு கால்வாய் கடலில் 35 கி.மீ.,யை 14.39 மணி நேரத்தில் நீந்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


தேனி பழைய அரசு மருத்துவமனை ரோட்டை சேர்ந்த நீதிராஜன் -- அனுஷா தம்பதியின் மகன் சினேகன். இவர் தேனி மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.இவர் இரண்டு முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாக் ஜலசந்தி கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். தற்போது வட அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் 35 கி.மீ., துாரத்தை பிரீ ஸ்டைல் முறையில் நீந்தி சாதனை படைக்க முடிவெடுத்தார்.


இதற்காக, கடந்த 2ல் இருந்து வடக்கு அயர்லாந்து சென்ற மாணவர், 12 முதல் 15 டிகிரியாக குளிர்ந்திருந்த நீரில், பயிற்சியாளர் விஜயகுமார் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்றார்.பின் செப்., 20ல் அந்நாட்டின் நீச்சல் பயிற்சியாளர்களுடன், பாதுகாப்புடன் கடலில் நீந்தினார். வட அயர்லாந்து முதல் ஸ்காட்லாந்து வரையிலான 35 கி.மீ.,யை நீந்தி கடந்தார்.வரும் 27ல், தேனி திரும்பும் இவருக்கு இணைய வழியில் பாராட்டுகள் குவிகின்றன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement