
பின்னர், அதே செங்கல்லை எடுத்து வைத்து, பணியை துவக்கி வைத்ததாக கூறப்பட்டது.பின், கோபத்தில் காரில் ஏறிய எம்.பி., செந்தில்குமார், இப்பணியை மேற்கொள்ளும் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகளை அழைத்து, 'உங்களுக்கு ஒரு முறை, இருமுறை சொல்லலாம். ஒவ்வொரு முறையுமா வந்து, பிரச்னை பண்ண வேண்டுமா,'' எனக்கேட்டு, புறப்பட்டார்.
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க., அவைத்தலைவர் வீரமணி கூறியதாவது:பூமி பூஜைக்காக செங்கலுக்கு மஞ்சள், குங்குமத்தில் பொட்டு வைத்திருந்தனர். அதை எம்.பி., செந்தில்குமார் காலால் எட்டி உதைத்தார். அதன் பின் பூஜை செய்யக்கூடாது என்றதுடன், மீண்டும் கல்லை துாக்கி வைத்து விட்டு சென்றார். ஒன்றிய செயலர் சண்முகத்தை கூப்பிட்டு, 'இதுபோன்று பொட்டு வைக்கக்கூடாது; வேலையை ரத்து செய்து விடுவேன்' என, மிரட்டினார். இதனால், தி.மு.க.,வினரான நாங்கள், எம்.பி., செந்தில் குமாருக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஜூலை 16ல் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணி பூமி பூஜைக்கு செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்ததால், பல தரப்பினர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று, அதியமான்கோட்டத்தில் நடந்த நுாலக பூமி பூஜையின்போது, செங் கற்களை எட்டி உதைத்ததாக, தி.மு.க.,வினரே அவருக்கு கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
'நான் எட்டி உதைக்கவில்லை!'
எம்.பி., செந்தில்குமார் கூறியதாவது:பூமி பூஜைக்கு என்னை அழைத்தபோதே, மதம் தொடர்பான நிகழ்வுகள் இருக்கக்கூடாது என, அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், பூஜைக்கு வைத்திருந்த செங்கல்லில் மஞ்சள், குங்குமம் பூசப்பட்டிருந்தது. ஆனாலும், விழாவில் அவற்றை எடுத்து வைத்து பணியை துவக்கி வைத்தேன்.
அதன் பிறகே அதிகாரிகள், ஒன்றிய செயலரிடம், அரசு விழாக்களில் ஒரு மதம் சார்பாக இருந்தால், என்னை அழைக்க வேண்டாம் எனக் கூறினேன். நான் செங்கற்களை எட்டி உதைக்கவில்லை. வேண்டுமென்றே சிலர், இதுபோன்ற வதந்திகளை பரப்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (79)
வீட்டு வரி, மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மறைந்து விட்டது . இதுதான் இராஜதந்திரம் . ஒரு சிறு அறுவை சிகிச்சை அளிக்கும்போது இப்போது மறத்து போக மருந்து அடிப்பது வழக்கமாகிப்போனது அப்போதெல்லாம் தொடையில் ஓங்கி அடிப்பார்களாம் அந்த வலியில் அறுவை சிகிச்சை வலி தெரியாதாம் ? அதுபோல் ..? வந்தே மாதரம்
மூத்திர சட்டியார்களின் ஆட்டம் கொஞ்சம் ஓவர்
தகுதியில்லாத எம்.பி. அந்த ஊரில் இருக்கும் இந்துக்கள் என்ன செய்துக்கொண்டு இருந்தார்கள்.
bonda vaayaa.
ஓட்டும் போட்டுட்டு கேவலப்படுறது தான் ஓசிகோட்டர் இந்து கொத்தடிமைகளின் அவலம் இவனை கூப்பிட்டவனுங்கள முதலில் உதைக்கனும்