Load Image
Advertisement

சைகையால் தெரியப்படுத்தும் தகவல்: இன்று சைகை மொழி தினம்

 சைகையால் தெரியப்படுத்தும் தகவல்:  இன்று சைகை மொழி தினம்
ADVERTISEMENT
உலகில் 7 கோடி பேர் காது கேளாதவர்களாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். மொத்தமாக இவர்களிடம் 300 விதமான சைகை மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. 1951 செப். 23ல் உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக இந்நாளே உலக காது கேளாதோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'சைகை மொழி நம்மை ஒருங்கிணைக்கிறது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சைகை மொழி என்பது தெரியப்படுத்தும் தகவலை சைகை மூலம் மற்றவருக்கு காட்சிபடுத்துவது ஆகும்.

சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகளை உருவாக்குதலை ஒவ்வொரு நாடும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. முழுமையாகவோ, பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகிறார்.


வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நேற்று பேருந்தில் செல்லும்போது காதுகேளா சிறு குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தார்கள் .இறைவன் என் இப்படி செய்கிறான் .ஆனால் Antha குழந்தைகள் கருவியின் துணையுடன் இந்த சமூகத்தில் வாழ்க்கையை எதிர்த்து போராடும் மனநிலையுடன் இருக்கின்றனர் .அவர்களுக்கு துணையாக வரும் தாய்மார்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement