Load Image
Advertisement

முக்கிய வழக்கு விசாரணை செப்.,27 முதல் நேரடி ஒளிபரப்பு

 முக்கிய வழக்கு விசாரணை  செப்.,27 முதல் நேரடி ஒளிபரப்பு
ADVERTISEMENT
புதுடில்லி :உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகள், செப்., 27 முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. உச்ச நீதிமன்றம் 2018ல் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தபோது, 'வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.


@1brஇந்நிலையில், தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்.வி.ரமணா, தன் கடைசி பணி நாளில் முக்கியமான சில வழக்குகளை இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்தார். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில், புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டம் புதுடில்லியில் நடந்தது.
Latest Tamil News

இதில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகளை, செப்., 27 முதல் 'யு டியூப்' சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.


வாசகர் கருத்து (2)

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    வேணாம். சுடச்சுட மீம்ஸ் போட்டுத் தள்ளிடுவாங்க.

  • எவர்கிங் -

    யாராவது அளவுக்கு அதிகமாக விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானே முன்வந்து எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement