பா.ஜ., அலுவலகம், ஜவுளிக்கடையில் கெரசின் குண்டு வீசிய மர்ம நபர்கள் ஓட்டம்
கோவை:கோவையில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தப்பட்ட நிலையில், இரண்டு இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., சோதனை நடத்தப்பட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதை கண்டித்து வெவ்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. இந்நிலையில், கோவையில் இரு இடங்களில் அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நடந்தன.குனியமுத்துார் புட்டுவிக்கி சாலையில் சென்ற அரசு பஸ் மீதும், என்.எச்., ரோட்டில் சென்ற அரசு பஸ் மீதும், மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.நேற்று இரவு 8:30 மணிக்கு ஒரே நேரத்தில், இரு இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்ட சம்பவமும் நடந்தது.
மாவட்ட பா.ஜ., அலுவலகம் அமைந்துள்ள காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோடு அருகே கெரசின் நிரப்பி திரி போடப்பட்ட பாட்டில், மர்ம நபர்களால் கொளுத்தி வீசப்பட்டது. எனினும் பாட்டில் வெடித்துச் சிதறவில்லை. அதை போலீசார் கைப்பற்றினர்.தகவல் பரவியதும், பா.ஜ., கட்சியினரும், போலீசாரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
'குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி பா.ஜ., கட்சியினர் கோஷம் எழுப்பியதால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.சம்பவ இடத்தில் துணை கமிஷனர் மாதவன், உதவி கமிஷனர் வின்சென்ட் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதே நேரத்தில், ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள மாருதி கலெக்சன்ஸ் என்ற ஜவுளிக்கடை மீதும் கெரசின் நிரப்பி திரி போடப்பட்ட பாட்டில் வீசப்பட்டது. ஆனால் வெடிக்கவில்லை.
இரு சம்பவங்களும் ஒரே நேரத்தில் நடந்திருப்பதாலும், இரு பாட்டில்களிலும் கெரசின் நிரப்பி இருப்பதாலும், ஒரே கும்பல் திட்டமிட்டு இந்த வேலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவங்களால் கோவையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. குண்டு வீச்சில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார், சிசிடிவி காட்சிப்பதிவுகளின் உதவியுடன் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்து (24)
காவல்துறை வேஸ்டு
மர்ம நபர்கள் அங்கேயே நின்றிருந்தாலும், விடியல் தீராவிஷ மாடல் ஏவல் துறை கைது செய்யப் போவதில்லை என்பதை அறியாத அப்பாவிகள் பயந்து ஓடிவிட்டனர்.
இவர்கள் குண்டு போட்டவர்களை கைது செய்ய மாட்டார்கள். ஏன் ஆனதற்கு தடுத்தாய் என்று தடுத்தவர்களை கைது செய்வார்கள்
அமைதி மார்க்கம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போராட 15000 பேரை ராணுவமா உண்டாக்கி இருக்கிறார்கள் தீவிரவாதிகள். பல மாநிலங்களில் வன்முறை நடக்கிறது. என்னன்னு கேட்டால் அமைதி மார்க்கம் என்கிறான்.