Load Image
dinamalar telegram
Advertisement

கப்பல் கட்டுமான நிறுவனத்தின் ரூ.2,747 கோடி சொத்து பறிமுதல்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி:குஜராத்தைச் சேர்ந்த பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான, 2,747 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.


நாட்டின் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனம் ஏ.பி.ஜி., ஷிப்யார்டு. நிறுவனத்தின் தலைமை அலுவலகங்கள் குஜராத்தின் டாகேஜ், சூரத் ஆகிய இடங்களில் உள்ளன. இந்த நிறுவனம் 28 வங்கிகளிடம், 23 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது.

Latest Tamil News

இதையடுத்து, ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனர் ரிஷி அகர்வால் மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக புதுடில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் ரிஷி அகர்வாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில் அமலாக்கத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்டதுடன், சட்டவிரோத பணப் பரிமாற்றத்திலும்ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு சொந்தமான, 2,747 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சூரத் உள்ளிட்ட நகரங்களில் ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (5)

  • Ramaswami Sampath - mumbai,இந்தியா

    தேர்தலுக்கு நிதி தந்து இருந்தால் இது நடந்து இருக்காது.

  • JaiRam - New York,யூ.எஸ்.ஏ

    குஜராத்தியா இருந்தால் எத்தனை கோடி வேண்டுமானாலும் தேசியமயமாக்கப்பட்ட வாங்கி அதிகாரிகள் என்னும் பிணம் தின்னும் பேய்கள் வாரி வழங்கிவிடுவார்கள்

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    வராகடன்னு தள்ளுபடி செய்திடுங்கோ. அதானி, அம்பானி, மோதி மாதிரி இவரும் உலக மகா பணக்காரர்களில் ஒருவராகலாம். இந்தியாவுக்கு பெருமைதானே.

  • அநாமதேயம் - ,

    இது எப்படி எப்போது வாங்கிய கடன். தவணை தவறிய கடன்களை கடன் சீரமைப்பு என்று மேலும் கடன்களை கொடுக்கும் முறையை ஒழிக்க வேண்டும்.இந்த கம்பெனி டைரக்டர்கள் வேறு எங்கும் கடன்களை வாங்க தடுப்பு முறை கொன்டு வரவேண்டும்

  • J.Isaac - bangalore,இந்தியா

    அனைத்து பண மோசடி முறைகேடுகளுக்கும் மறைமுகமாக காரணம் ஆடிட்டர்கள் .ஆனால் அவர்கள் சீனில் வருவது இல்லை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்