Load Image
dinamalar telegram
Advertisement

பங்கு சந்தையை சரித்த அமெரிக்க வட்டி விகிதம்

Tamil News
ADVERTISEMENT
மும்பை:இந்திய பங்குச் சந்தைகள், இரண்டாவது நாளாக, சரிவைக் கண்டுள்ளன. அமெரிக்க மத்திய வங்கி, அந்நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வட்டியை உயர்த்தி அறிவித்தது.

இதையடுத்து, நேற்று இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன.மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' 337 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தையின் 'நிப்டி' 89 புள்ளிகளையும் இழந்தன. சென்செக்ஸ் பிரிவில் 'பவர்கிரிட்' நிறுவனம் அதிக இழப்பை சந்தித்தது.அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தது மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய சந்தைகள் மட்டுமின்றி; சியோல், டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் சந்தைகளும் நேற்று சரிவைக் கண்டன.பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தால், உலகளவில் இணைக்கப்பட்டிருக்கும் துறைகளான தகவல் தொழில்நுட்பம், உலோகங்கள், மருந்து ஆகிய துறைகளில், குறுகிய காலத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்கிறார்கள், நிபுணர்கள்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement