Load Image
dinamalar telegram
Advertisement

ஆந்திராவில் என்.டி.ராமாராவ் பல்கலை.யின் பெயரை மாற்ற தெலுங்கு தேசம் எதிர்ப்பு

Tamil News
ADVERTISEMENT
அமராவதி: ஆந்திராவில் முன்னாள் முதல்வர் என்.டி., ராமாராவ் பல்கலை. பெயரை ஓய்.எஸ்.ஆர்.பல்கலை என பெயர் மாற்றம் செய்து கொண்டு வரப்பட்ட மசோதாவிற்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்.டி.ராமாராவ் அறிவியல் பல்கலை. செயல்பட்டு வருகிறது. இப்பல்கலை. பெயரை மறைந்த முன்னாள் காங். முதல்வர் ஓய்.ஆர். ராஜசேகர ரெட்டி அறிவியல் பல்கலை. என பெயர் மாற்றம் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Latest Tamil News
ஆந்திர அரசின் இந்த முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, கட்சி நிர்வாகிகளுடன் இன்று கவர்னர் பிஷ்வபூசன் ஹரிசந்தனை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

இது குறித்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., கூறுகையில், என்.டி.ராமாராவின் புகழை யாராலும் அழிக்க முடியது.


வாசகர் கருத்து (6)

  • sankar - சென்னை,இந்தியா

    வீண் வம்பு .

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    திணிக்கப்பட்ட எதுவுமே பின்னர் உமிழப்படும். இயற்கை விதி.

  • அநாமதேயம் - ,

    இது தெலுங்கு மக்களின் நம்பிக்கையை வேரறுக்கும் நடவடிக்கை.இவர்களின் குடும்ப சொத்து போல அரசாங்க கஜானா நிறுவனங்களை நடத்தி வரும் இந்த கிரிப்டோ

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    திருட்டு பய ஒழிக

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்