Load Image
Advertisement

மோடி சொன்னது தான் சரி: பிரான்ஸ் அதிபர் பாராட்டு

Tamil News
ADVERTISEMENT
நியூயார்க்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை குறிப்பிட்டு, பாராட்டு தெரிவித்தார்.


@1brமத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் சமீபத்தில் எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடந்தது. அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது தொடர்பாக இருவரும் பேசியபோது, 'இந்த யுகம் போருக்கானது அல்ல; எந்தப் பிரச்னைக்கும் ஜனநாயக ரீதியில் பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Latest Tamil News

இந்நிலையில், ஐ.நா., பொது சபை கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டதுபோல், இந்த யுகம் போருக்கானது அல்ல. கிழக்கத்திய நாடுகளை எதிர்ப்பதால் மேற்கத்திய நாடுகள் மீது பழிவாங்கும் வகையில் செயல்படுவது சரியல்ல.தற்போது உலகெங்கும் உள்ள சவால்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (19)

  • Sudhaker Mani - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    என்ன, திருவாளர் மோடி அவர்களை மேலை நாட்டினர் ஒருவர் பாராட்டிவிட்டாரா, இப்போ பாருங்க நம்ம திக மற்றும் திமுக அவர்களின் ஐடி விங் எல்லாரும் கருத்துக்களை கக்கப்போகிறார்கள்.

  • Asagh busagh - Munich,ஜெர்மனி

    மோடிஜி என்னதான் சொன்னாலும், 1960ல இருந்த சோவியத் ரஷ்யாவை மனசுல வைச்சுக்கிட்டு இன்னமும் ரஷ்யா நட்பு நாடா பாராட்டுறவனுங்க தான் இங்க இருக்குறானுங்க. அப்போ இரண்டு பக்கமும் இருந்த தலைவர்கள் எல்லாம் மேல போயி ரொம்ப வருஷம் ஓடிடுச்சு. அதே மாதிரி அந்த சமயத்துல நம்மக்கு எதிரா செயல்பட்ட மேலை நாட்டு தலைவர்கள் முக்கியமா அமெரிக்கா தலைமையும் மண்டைய போட்டாச்சு. காலம் உருண்டோடி இப்போ நம்ம எதிரி நாடா சீனா உருவெடுத்து நிக்கிறான். அதே சீனா பக்கம் புடின் சொன்ன "லிமிட் இல்லா" பார்ட்னெர்ஷிப்ல ரஷ்யா இருக்கான். அருணாசலத்துல நம்ம நிலத்தை திருடின சப்பை மூக்கனுங்களுக்கு எதிரா இப்போ உள்ள அமெரிக்கா தலைமை தான் குரல் கொடுக்கிறான். புடின் வாய் மூடி காத பொத்திகிட்டு ஓரமா குந்தி இருக்கிறது நல்லா தெரியுது. சீன விஷயத்துலையும் சுயநலம் தான் காரணம்னு அமெரிக்க எதிர்ப்புவாதிகள் சப்பை கட்டு காட்டுவானுங்க. அப்படியே அது உண்மையா இருந்தா, அதுல என்ன தப்பு இருக்கு? நமக்கும் சீனா ஓரளவுக்கு மேல வளர கூடாதுனு சுயநலம் இருக்குதானே? நடைமுறை பிரச்சனைக்காக அணி மாறுறதுல என்ன தப்பு?

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    மோடிஜியை உலக தலைவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், உள்நாட்டில் இருக்கும் ஒரு சில தேசதுரோகிகளுக்கு அவர் அருமை, பெருமை புரியாமல் போனதுதான் பெரிய வருத்தம். ஜெய் மோடிஜி ...

  • Samathuvan - chennai,இந்தியா

    ஏற்கெனவே நம்ம ஆளு கைகொடுத்த ராசி இரண்டு பேரோட பதவி போயாச்சு மற்றும் ஒன்னு மேல போயாச்சு, இதுல கட்டிப்பிடி வேறயா ஹூம் என்ன செய்யுறது மேக்ரான் ஜாதகம் அப்படி.

  • மணி - புதுகை,இந்தியா

    ம்ம் பாராட்டுதலை பாட்டாகவே பாடிவிட்டீரா.. ஆகட்டும், அடுத்த அறுபதாயிரம் கோடி ஆர்மி ஆர்டர் உமக்குத்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up