Load Image
Advertisement

இரண்டு மாதங்களில் புது நத்தம் ரோடு பறக்கும் பாலம் திறப்பு

  இரண்டு மாதங்களில் புது நத்தம் ரோடு பறக்கும் பாலம் திறப்பு
ADVERTISEMENT
மதுரை-மதுரை புது நத்தம் ரோட்டில் பறக்கும் பாலம் பணிக்காக அகற்றப்பட்ட பஸ் ஸ்டாப்புகளை மீண்டும் அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன்எதிரொலியாக பைபர் கூரை கொண்ட நிழற்குடையுடன் ஸ்மார்ட் பஸ் ஸ்டாப்அமைக்கும் பணி துவங்கியது.


இரண்டு மாதங்களில் பாலம் திறக்கப்பட உள்ளது.ஐ.ஓ.சி., ரவுண்டானா முதல் ஊமச்சிகுளம் வரை7.3 கி.மீ.,க்கு மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் பறக்கும் பாலம் கட்டும் பணி முடிந்தது. பாலத்தின்மேலே தார் ரோடு, மீடியன், தடுப்புச்சுவர், கீழ்ப்புறம் மழை நீர் கடத்தும் குழாய் பொருத்தும் பணி நடக்கிறது. பணி துவங்கிய போது ரோட்டின் இருபுறமும் நடைபாதை அமைக்க 30க்கும் மேற்பட்ட பஸ் ஸ்டாப்புகள் அகற்றப்பட்டன.



நடைபாதை அமைத்தும் பஸ் ஸடாப் அமைக்கவில்லை என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாகபாலம் துவங்கும் கலெக்டர் பங்களா ரோட்டின் இருபுறமும் பஸ் ஸ்டாப் அமைக்கும் பணி துவங்கியது. ஊமச்சிகுளம் வரை இடது, வலதுபுற நடைபாதையில் தலா 17 வீதம் 34 ஸ்மார்ட் பஸ் ஸ்டாப்புகள் அமைக்கப்படுகின்றன. ரோட்டு ஓரம் இரும்பு டவரில் மின் விளக்கு பொருத்திய நிலையில் பால பில்லர்களின் இருபுறமும் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணியும் துவங்கியது.



நத்தம் டூ மதுரை பால துாண்களில் மீனாட்சி அம்மன் சிலை, மதுரை டூ நத்தம் துாண்களில் கள்ளழகர் சிலை வைக்கப்படுகிறது. இதற்காக முதல் துாணில் அலங்கார 'போக்கஸ் லைட்' பொருத்தியுள்ளனர். பொறியாளர் ஒருவர் கூறியதாவது: பறக்கும் பாலப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐ.ஓ.சி., ரவுண்டானா டூ அவுட்போஸ்ட், மாநகராட்சி மெயின் நுழைவாயில், சொக்கிகுளம் இறக்கம், நாகனாகுளம், திருப்பாலையில் 2 சர்வீஸ் பாலங்கள் கட்டும் பணி நடக்கிறது. 9 லேயர் ரோடு அமைத்த நிலையில் இறுதியாக 10வது லேயர் ரோடும் அமைக்கப்படும். மொத்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு 2 மாதங்களில் திறக்கப்பட உள்ளது, என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement