Load Image
dinamalar telegram
Advertisement

நான்கு வழிச்சாலை பணிகளில் நீடிக்கும் அலட்சியத்தை தவிர்க்கலாமே

Tamil News
ADVERTISEMENT

ரெட்டியார்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளில் மேம்பாலம், ரோடு சந்திப்பு பகுதிகளில் பணி குறித்த அறிவிப்பு ,விபத்து எச்சரிக்கை பலகை என எதுவும் இல்லை.


இதில் நீடிக்கும் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் விபத்துகள், உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.மாவட்டத்தில் காமலாபுரம் -மெட்டூர் ரோடு(பழைய, புதிய வழித்தடங்களில் 2 பணிகள்), திண்டுக்கல் -பழநி ரோடு, கரூர் -திண்டுக்கல் ரோடு, நத்தம்- துவரங்குறிச்சி ரோடு தடங்களில் நான்கு வழி சாலை , மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல், காமலாபுரம் தடங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது.



அதேவேளையில் தற்போதைய ரோடு பராமரிப்பை கண்டுகொள்வதில்லை. தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இங்கு கனரக வாகனங்களைவிட இரு சக்கர வாகனங்களே அதிகம். செம்மடைப்பட்டி, ரெட்டியார்சத்திரம், மாங்கரை விலக்கு, முத்தனம்பட்டி, இடையபட்டி, பாலம்ராஜக்காபட்டி உள்ளிட்ட இடங்களில் ரோடு சேதமடைந்து குழிகள் உருவாகி உள்ளன. வடிகால் வசதியின்றி மழைநீரும் தேங்கியுள்ளது. இதனால் நடுரோட்டை கடந்து வலது புறத்தில் வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மழைநீர், குழிகளால் நிலைதடுமாறுகின்றனர்.பழநி தைப்பூச விழாவிற்காக தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் மெட்டூர்-மூலச்சத்திரம் வழியே பாதயாத்திரை வருவது வழக்கம். இந்த வழித்தடத்தில் ரோடு விரிவாக்க பணி துவங்கி பல மாதங்களாகிறது


. அதிகாரிகள் அலட்சியத்தால் இதன் பணியில் இழுத்தடிப்பு நீடிக்கிறது. பழைய வழித்தடங்கள் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில்.போதிய தடுப்புகள், எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்கவில்லை. குறுகிய பகுதிகளில் ஜல்லி கலவை கொட்டி முழுமையின்றி விட்டுள்ளனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.நத்தம் பரளிபுதுாரில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் ரோட்டில் தேவையான இடங்களில் போதிய அறிவிப்பு பலகை இல்லை. சேர்வீடு அருகே உள்ள உயரம் குறைந்த மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வேடசந்துார் -கரூர் ரோட்டில், காக்காத்தோப்பு பகுதியில் பாலம் இல்லாமல் திண்டுக்கல் செல்லும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.அதிகாரிகள் அலட்சியத்தால் அப்பாவி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இப்பிரச்னைகளுக்கு துரித தீர்வு காண தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்வர வேண்டும்.

தொல்லைகளுக்கு தீர்வு தேவை

பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில் விரிவாக்க பணிகள் வரவேற்கத்தக்கது. ஆனால் இவை ஆமை வேகத்தில் நடக்கின்றன. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மக்களுக்கு வசதிகளை விட தொல்லைகளே அதிகம். பாதுகாப்பற்ற சூழலில் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். பரவிக்கிடக்கும் ஜல்லி கற்கள், நீர் தெளிக்காமல் குவிக்கும் கிரசர் கழிவுகளால் துாசு மண்டலம் கண்ணை மறைக்கிறது.


ரோட்டோர குடியிருப்புவாசிகளும் மூச்சு திணறல் என உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் ரோடு போதிய அகலமின்றி குறுகியுள்ளது. வாகன போக்குவரத்தில் நெரிசல், விபத்துகள் அதிகரித்துள்ளது. உரிய இடங்களில் எச்சரிக்கை, சந்திப்பு, வழித்தட மாற்றம் அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும். விபத்து அபாய பயணத்தை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் துரித நடவடிக்கை தற்போதைய அவசியமாக உள்ளது.டி.பி.மயில்வாகனன்,கிழக்கு ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர், ரெட்டியார்சத்திரம் .



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement