வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.'லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை. தேசிய அளவில் பா.ஜ., கூட்டணியை எதிர்கொள்ள, எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் முடியும்.
தனித்தனியாக போனால் அது நிச்சயமாக பாதிக்கும்' என, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார்.இதன் வாயிலாக, லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பலம் வாய்ந்த அணியை உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியை தவிர, மற்ற கட்சிகள் தொடர்கின்றன.ஆனால், தொகுதி பங்கீட்டில் சில மாற்றங்களை செய்து, அணியை பலப்படுத்த, கூடுதலாக சில கட்சிகளையும் சேர்க்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு தமிழகத்தில், 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டன. அதில் தமிழகத்தில், 8 தொகுதிகளும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில், 4 தொகுதிகளுடன், புதுச்சேரியும் சேர்த்து ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு, பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய 3 கட்சிகளையும் சேர்த்து, அணியை பலப்படுத்த தி.மு.க., திட்டமிடுவது தான் காரணம்.
பா.ம.க.,விற்கு தர்மபுரியும், பெரம்பலுாரும் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியை, பா.ம.க., கேட்டால், காங்கிரசுக்கு வேறு தொகுதியை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளது. பா.ம.க., - ம.நீ.ம., கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகளும், தே.மு.தி.க.,வுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கலாம் என, தி.மு.க., தலைமை கருதுகிறது. இதற்காக, காங்கிரசுக்கான ௧௦ தொகுதிகளை பாதியாக குறைக்க, தி.மு.க., முன்வந்துள்ளது.
தேசிய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணையவில்லை என்றாலும், தி.மு.க., தலைமையில், தமிழகத்தில் முக்கிய கட்சிகள் ஒன்று சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (49)
முதலில் குஜராத்தை காப்பாற்ற பாருங்கள்.
Their agenda isagainst Hindus, Unity, Integration. The irony is no one has come forward to eradicate the poverty etc., They are all planning for their family developments . This is true. We are witnessing the same for the past three decades. Coming with empty hands become an indstrialists, Educationalist, Business magenet and so on. vandhe madaram
கமல் தவிர பாமகவோ தேமுதிகவோ திமுக கூட்டணியில் சேர வாய்ப்பில்லை. பாமக 5 அல்லது 6 தொகுதிகளையும் தேமுதிக 3/4 தொகுதிகளையும் எதிர்பார்க்கும். அதை திமுக கொடுக்க வாய்ப்பில்லை. கமலை பொறுத்தவரை அவர் படங்களை உதயநிதி வெளியிட்டாலே போதும். கமலுக்கு அரசியல் ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.
அவ்வளவு சுலபமாக விட்டு விடுவார்களா பழனிசாமியும் அண்ணாமலையும்.
கோவிந்தா கோவிந்தா