Load Image
dinamalar telegram
Advertisement

கல்வி மாவட்டங்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை; ஆசிரியர்கள், அலுவலர்கள் அதிருப்தி

Tamil News
ADVERTISEMENT
உளுந்துார்பேட்டை-கல்வி மாவட்டங்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவில் ஒரே அதிகாரியின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையால் ஆசிரியர்கள், அலுவலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், பள்ளிகளை கண்காணிக்கவும், நிர்வாக வசதிக்காகவும் பரப்பளவைக் கொண்டு கல்வி மாவட்ட அளவில் அலுவலகங்கள் துவங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம், திருக்கோவிலுார் கல்வி மாவட்டம், உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டம் என, 3 கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இது போன்ற தமிழகம் முழுவதும் பரப்பளவுக்கு ஏற்ப கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, டி.இ.ஓ.,க்கள், அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.இ


ந்தக் கல்வி மாவட்டங்களுக்கு என, தனித் தனியாக டி. இ.ஓ., அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பள்ளிகளுக்கு தேவையான சீருடை, புத்தகங்கள் உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.மேலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு எளிதாக இருந்தன. அந்தந்த பகுதிகளில் உள்ள டி.இ.ஓ.,க்கள் பள்ளிகளை நேரடியாக கண்காணிக்கவும் வசதியாக இருந்தது.அ.தி.மு.க., ஆட்சியில் இந்த கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, கல்விப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது இக்கல்வி மாவட்டங்களை மாற்றி அமைத்து பழைய நடைமுறைகளிலேயே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன்படி, மாவட்டத்திற்கு துவக்கப் பள்ளிக்கு என, தனியாக ஒரு டி.இ.ஓ., நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு என தனியாக ஒரு டி.இ.ஓ., மேல்நிலைப் பள்ளிக்கு சி.இ.ஓ., என மாவட்டத்திற்கு ஒரு அதிகாரியின் தலைமையின் கீழ், அதிகாரி நியமித்து கண்காணிக்கும் பணியில் மேற்கொள்ளப்படவுள்ளன.இது வரும் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் பள்ளிகளை நேரடியாக கண்காணிப்பதில் சிக்கல் ஏற்படுவதோடு பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் தங்களது தேவைகளுக்காக நீண்ட துாரம் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.இதனால் காலம், நேரம் விரையமாவதோடு பணிகளும் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தற்போதுள்ள நிலையையே தொடர வேண்டுமென ஆசிரியர்கள், அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement