Load Image
Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு; சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை

 விழுப்புரம் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு; சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை
ADVERTISEMENT
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான யூரியா கிடைக்காமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் 75 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தில் மிக முக்கிய பிரதானமாக உள்ளது.மாவட்டத்தில் 3.33 லட்சம் எக்டேரில் நெல், பயறு வகைகள், கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தின் மொத்த பயிர் பரப்பில் 40 சதவீதம், ஆதாவது 1.33 லட்சம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.


சொர்ணவாரி, சம்பா, நவரை என 3 பருவங்களில் நெல் சாகுபடி நடக்கிறது. தற்போது சம்பா பருவத்திற்கு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நெல் நாற்று விடப்பட்டு நடவு பணிகள் துவங்கி உள்ளது.நெல் நடவு செய்வதற்கு முன்பு அல்லது நடவு செய்த சில நாட்களில் அடி உரமாக யூரியா, காம்ப்ளக்ஸ் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது. அதன்பின்பு 15 நாட்களில் 2வது முறையும், ஒரு மாதம் கழித்து 3வது முறை உரம் தெளிக்கப்படுகிறது. இதில் யூரியா பிரதான உரமாக பயன்படுத்தப்படுகிறது.தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான யூரியா போதிய அளவில் கிடைக்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் கூட யூரியா கிடைப்பது இல்லை.45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை ரூ. 266க்கும், காம்ப்ளக்ஸ் ரூ. 1,450, டி.ஏ.பி. என்கிற டை அமோனியம் பாஸ்பேட் ஒரு மூட்டை ரூ. 1,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சில தனியார் மற்றும் கூட்டுறவு சொசைட்டிகளில் ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ் வாங்கினால் தான் ஒரு மூட்டை யூரியா வழங்கப்படும் என கட்டாயப் படுத்துகின்றனர். வேறு வழியின்றி காம்ப்ளக்ஸ் உரத்துடன், யூரியா வாங்கும் நிலை உள்ளது.இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணியை துவக்கியுள்ள விவசாயிகள் போதிய அளவில் யூரியா கிடைக்காததால், கவலை அடைந்துள்ளனர்.

யூரியா பதுக்கல்

யூரியா மூட்டை விலை ரூ. 1,200 அதில் மத்திய அரசு மானியம் போக ரூ. 266க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவால் சில பெரிய விவசாயிகள் நெல் நடவு பணிக்கு முன்னதாக நுாற்றுக்கணக்கான யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்து கொள்கின்றனர். ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 2 மூட்டை யூரியா போதுமானது. ஆனால் சில விவசாயிகள் அதிக அளவில் யூரியாவை வாங்கி பயன்படுத்துவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என குற்றச்சாட்டு எழுகிறது.



வாசகர் கருத்து (1)

  • எவர்கிங் -

    கம்பன், ஸ்டார்ட்மியூஸிக்.... ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement