ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் திமுக அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பக்தி பரவசத்துடன் புனித தீர்த்தமாடினார்.
இதையடுத்து ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக இன்று (செப்.,21) மஹாளய பட்சத்தையொட்டி காலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தனுஷ்கோடி சென்ற அவர், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்தார்.

திமுக இரட்டை வேடம்
பின்னர் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடிய பின்பு, ராமநாதசாமி ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். ஒருபுறம் திமுக எம்.பி., ஆ.ராசா ஹிந்து மதத்திற்கு விரோதமாகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் அவதூறாக பேசி வருகிறார்.
இதற்கு ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியிருக்க, இன்னொருபுறம், திமுக அமைச்சர் அன்பில் பொய்யாமொழி ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்தமாடியுள்ளார். ஹிந்து மத எதிர்ப்பு முகத்தை காட்டும் திமுக.,வினர் ஹிந்து மத பக்தர்களாகவும் இன்னொரு முகத்தை காட்டுவது அவர்களது இரட்டை வேடத்தை வெளிப்படுத்துவதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (67)
கடைந்து எடுத்த அயோக்கியத்தனம்.பித்தலாட்டம். யாரும் இவர்களை இனிமேல் நம்ப தயாரில்லை.
இந்துமத ஜென்ம விரோதி புரூடா விடியலுக்கு தன்மானமுள்ள இந்துக்களின் போராட்டத்தை பார்த்து பயந்துட்டா அதா கொத்தடிமைங்களை அனுப்பி டிராமா போடுகிறார் இனிவரும் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்தும் சொல்லுவா போலருக்கே
நீ என்ன தான் தலைகீழாக நின்னு காவடி தூக்கினாலும் உனக்கும் உன் இந்துமத ஜென்ம விரோதி விடியலுக்கு ஆப்பூ அடிக்காமல் விடமாட்டோம்
ஆண்டிமுத்து ராசாவின் இந்துமததுக்கு எதிராக பேசியதை மறைக்க போடும் நாடகம் இந்துக்கள் இதை நம்பி ஏமாறாதீர்கள் இதெல்லாம் இந்துமத ஜென்ம விரோதி புரூடா விடியலின் செட்டப்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இது தீ மு காவிற்கு அவமானமல்ல........மானம் இல்லாத தமிழ் நாட்டு மக்களுக்கு தான் இந்த குடும்ப ஆட்சிக்கு ஒட்டு போடும் மானம் இல்லாத தமிழர்கள்.