ADVERTISEMENT
மதுரை : மதுரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிகவரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.சூரிக்கு மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன்' என்ற பெயரில ஓட்டல்கள் உள்ளன. சமீப காலத்தில் துவக்கப்பட்ட இந்த ஓட்டல்கள் சூரியுடையது என்பதால் எந்நேரமும் பிஸி'யாக செயல்பட்டன.
இந்த ஓட்டல்களுக்கு தலைமையிடமாக காமராஜர் சாலை தெப்பக்குளம் அருகே ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று மாலை வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் குழு சோதனை நடத்தினர். உணவுப்பொருட்கள் கொள்முதலில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சோதனை நடந்தது. இச்சோதனையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அலுவலகத்திற்கு வந்து விளக்கமளிக்கவும் ஓட்டல் ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (10)
இவரு மேடையில் நாத்திகவாதம் பேசுவார் கடை பெயர் அம்மன் ஓட்டல் அப்படீனு வச்சுருக்கார். இந்த கடையில் சாப்பிட்டுட்டா ஜென்ம சாபல்யம் கிடைக்கும் nu நம்பி சாப்பிடற ஆட்ல இருக்காங்க
சூரி கடையில் பூரி நல்லா இருக்கும்
கூடா நட்பால் வந்த சோதனையோ
ஓட்டலுக்கு ஓசி விளம்பரம்...... அடுத்த சரவணபவனாக மாறலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ம்ம் பிடிக்கிறதுக்கு ஆளே இல்லயாக்கும்...ஒரு அப்புராணி புள்ள நடத்தும் பரோட்டா கடையில போயி ரைடு நடத்துறாங்கன்னா என்ன விஷயம்னு புரிஞ்சிக்கலாம்.