மும்பை: ஜூஹூ கடற்கரை அருகே மத்திய அமைச்சர் நாராயண் ரானே, விதிகளுக்கு மாறாக கட்டிய பங்களாவை இடிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தனுகா மற்றும் கமல் கட்டா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: ரானேவுக்கு சொந்தமான நிறுவனம் அளித்த மனுவை பரிசீலனை செய்ய மாநகராட்சியை அனுமதிக்க முடியாது. இது, அங்குள்ள ஒட்டுமொத்த விதிமீறல் கட்டுமானத்தையும் அங்கீகரிக்க வழி ஏற்படுத்திவிடும்.
விதிமீறி கட்டப்பட்ட பங்களாவை இரண்டு வாரங்களுக்குள் இடித்து விட்டு, அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை, மஹாராஷ்டிரா மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் எனக்கூறப்பட்டது.

ரானே சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், 6 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மும்பை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வாசகர் கருத்து (8)
ராணுவ வீரர் களுக்கென ஒதுக்கிய கட்டடத்தை முந்தைய அரசின் காங்கிரஸ் அமைச்சர்கள் ஆட்டையப் போட்டு வீடுகளை வாங்கிய போதும் உயர் நீதி மன்றம் இடிக்க வேண்டும் என உத்தரவிட்டது அப்போதைய மாநகராட்சி காங்கிரஸ் ஆதரவு பெற்றதால் அதை ஒழுங்கு படுத்திவிட்டது.
இடித்துத் தள்ளுவதால் யாருக்கு என்ன பிரயோஜனம்? முதலில் ஜாமீனில் , பரோலில் வெளிவர முடியாமல் அந்த அமைச்சருக்கு 5 வருஷமோ, 10 வருஷமோ ஜெயில் தண்டனை குடுங்க. அப்புறமா அந்த வீட்டு மதிப்பில் 50 சதவீதம் அபராதமா விதிங்க. இல்லேன்னா வீட்டை வித்துருங்க. இதுக்கெல்லாம் பீனல் கோட் புண்ணாக்கெல்லாம் கிடையாது. முதலில் சட்டங்களை எழுதுங்க. திடீர்னு சாமி வந்த மாதிரி நீதிமன்றம் ஆடினால் வேலை நடக்காது. நீங்க வழங்கிய இதே தீர்ப்பை நாளைக்கி பெரிய நீதிபதிகள் தூக்கில் போட்டுருவாங்க. ஜாக்கிரதை.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முன் இடித்து தள்ள வேண்டும்
ஜுஹுக்கு பதிலா நம்ம வூருக்கு வந்தா கடற்கரைல இல்ல கடலுக்குள்ளயே கட்டலாம் பக்கத்துலே உங்களுக்கு புதுசா பேனாவோ பென்சிலோ பாட்டிலோகூட வெச்சுக்கட்டலாம்
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு வாரிசு இல்லை.. கருணாநிதிக்கு வாரிசு உண்டு மெரினாவில் பேனா வெச்சத்துக்கப்பறம் வாரிசுக்கு இடம் உண்டா? அப்ப மொத்த கடும்பத்துக்குமே இடம் ஒதுக்கப்படுமா?