Load Image
dinamalar telegram
Advertisement

ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை: இந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு

Tamil News
ADVERTISEMENT
கோவை: "தி.மு.க., கட்சி, முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. கட்சியை உடைக்கவும், கைப்பற்றவும் தி.மு.க.,வில் மூன்று குழுக்கள் செயல்படுகின்றன," என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், ஹிந்து முன்னணி சார்பில் நடந்த, கடை அடைப்பை பார்வையிடுவதற்கு, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மேட்டுப்பாளையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நீலகிரி எம்.பி. ராசா மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். அந்த தகவல் எதில் உள்ளது என அவர் தான் கூற வேண்டும்.

ராசாவை கண்டித்து, நீலகிரி தொகுதிகளில், ஹிந்து முன்னணி சார்பில், கடையடைப்பு போராட்டம் நடந்தது. 100 சதவீதம் வெற்றி. அனைத்து வணிகர் சங்கம், வியாபாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடைகளை திறக்கும்படி போலீசார் கூறி வருகின்றனர்.

தி.மு.க., வை, உடைக்கவும், கைப்பற்றவும் மூன்று குழுக்கள் செயல்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு குழுவாகவும், ராசா ஒரு குழுவாகவும், இதில் கனிமொழி உள்ளார். மருமகன் சபரீசன் ஒரு குழுவாகவும் செயல்படுகின்றனர். தி.மு.க., இணை பொது செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், கட்சியிலிருந்து விலகி உள்ளார். தி.மு.க., வின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என, அவர் பேட்டியில் கூறியுள்ளார். இன்னும் நிறைய பேர் வெளியேறுவர்.

காவல்துறையினர், அரசியல் வாதிகளுடன் சேர்ந்து, முதல்வருக்கு தவறான தகவல் கொடுத்து வருகின்றனர். தி.மு.க., கட்சியின் தலைமை, ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் உடல்நலம் சரியில்லாத முதல்வர், வெளிநாடு சிகிச்சைக்கு செல்லாமல் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

பங்கேற்பு:



அப்பொழுது, மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், கோவை மண்டல செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.



வாசகர் கருத்து (4)

  • Devaraj - Tirupur,இந்தியா

    , தொண்டர் கைலே இருக்கு கட்சி

  • Samathuvan - chennai,இந்தியா

    , அப்படித்தானே

  • Tamil - Trichy,இந்தியா

    எல்லாம் ராசா பதில் சொல்வார்.

  • Raj Kamal - Thiruvallur,இந்தியா

    சாதிகளை கடந்து, ஒற்றுமையை உருவாக்குங்கள். அது தான் இன்றைய முதல் தேவை. அது நடந்தால் மற்றவை தானே நடக்கும். ஆனால் அது அத்தனை எளிதான காரியம் கிடையாது. அதற்கான முயற்சியை நீங்கள் எடுக்கும்போது தான் உங்களுக்கு உண்மையான நீங்கள் சொல்கிற இந்துக்களின் உண்மை சகோதரத்துவம் புரியும், புரியவைக்கப்படும். இன்றும் இரட்டை குவளை முறை, தனி சுடுகாடு, தீண்டாமை சுவர் தமிழகத்தில் உள்ளது. ஆரம்பித்தால் உங்களுக்கே புரியும், புரியவைக்கப்படும். நீங்கள் ஒதுக்குவதால் தானே மற்ற மதங்கள் அந்த இடைவெளியை பயன்படுத்துகின்றன? அனைவரையும் அரவணையுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement