Load Image
dinamalar telegram
Advertisement

காங்., தலைவர்களுடன் டீல் பேசிய பா.ம.க.,

Tamil News
ADVERTISEMENT
சென்னை : லோக்சபா தேர்தல் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்களிடம், பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி; 1999-ல் தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி; 2004-ல் தி.மு.க., -- காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பா.ம.க.,வுக்கு, 2009 லோக்சபா தேர்தலுக்கு பின் சரிவு ஏற்பட்டது.

சந்தேகம்கடந்த 2004 முதல் 2009 வரை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக, செல்வாக்கோடு இருந்த அன்புமணியால், அதன் பின் முக்கிய பதவிக்கு வர முடியவில்லை. 2016 சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., ஐந்து எம்.எல்.ஏ.,க்களை பெற்றது.சட்டசபை தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிய பா.ம.க., 2024 லோக்சபா தேர்தலில் குறைந்தது நான்கு எம்.பி.,க்களையாவது பெற்று, 2009-ல் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்கும் இலக்குடன், காய்களை நகர்த்தி வருகிறது.அ.தி.மு.க.,வில் நடந்து வரும் உட்கட்சி குழப்பத்தால், தி.மு.க.,வை வீழ்த்த முடியுமா என்ற சந்தேகம் ராமதாஸ், அன்புமணிக்கு ஏற்பட்டுள்ளது.அதனால், தி.மு.க., அணிக்கு செல்ல, பா.ம.க., விரும்புகிறது.

Latest Tamil News
கம்யூனிஸ்ட், வி.சி., கட்சிகளின் எதிர்ப்பால், பா.ம.க.,வை தி.மு.க., கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எனவே, எந்த கட்சியையும் பகைத்து கொள்ளாமல், 'அனைவருக்கும் நண்பர்' என்ற அரசியலை ராமதாசும், அன்புமணியும் மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த, 16-ம் தேதி, பா.ம.க., தொண்டர்களுக்கு, ராமதாஸ் கடிதம் எழுதினார்.அதில், 'வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, 2021 பிப்ரவரியில், அன்றைய முதல்வர் பழனிசாமி நிறைவேற்றினார். அதன்பின், ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் அரசு, இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. எனவே, இருவருக்கும் நன்றி' என குறிப்பிட்டு இருந்தார். வரும் 2024-ல் எந்த கூட்டணிக்கு செல்வது என்பதில், பா.ம.க.,வால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்பதையே, ராமதாஸ் எழுதிய கடிதம் காட்டுவதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மின் கட்டண உயர்வுஅதனால் தான், 'ஆன்லைன்' சூதாட்டம், மின் கட்டண உயர்வு என, தமிழக அரசை விமர்சிக்க வேண்டிய இடத்தில் கூட, மென்மையான வார்த்தைகளை தேடித் தேடி ராமதாசும், அன்புமணியும் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.


தி.மு.க., கண்டுகொள்ளாத நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட சிலரிடம், 2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக, அன்புமணி ஆலோசித்துள்ளதாக, பா.ம.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அதிருப்தி'தி.மு.க., அணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் இருந்தாலும், 2024 லோக்சபா தேர்தல் எளிதாக இருக்காது. இப்போது, தி.மு.க., ஆளுங் கட்சி என்பதால் மக்களிடம் அதிருப்தி கண்டிப்பாக இருக்கும்.'கடந்த 2019 போல இப்போது மோடிக்கு எதிரான அலையும், தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை.எனவே, பா.ம.க., இல்லாவிட்டால், வடக்கு, மேற்கு மாவட்டங்களில் வெல்வது கடினம்' என, காங்கிரஸ் தலைவர்களிடம், அன்புமணி கூறியதாக தெரிகிறது.தேய்ந்து கொண்டிருக்கும் பா.ம.க.,வை காப்பாற்ற, மீண்டும் ஏதோ ஒரு கூட்டணியில் இணைந்து விட ராமதாஸ் முயற்சிக்கிறார் என, அக்கட்சியினர் தெரிவித்தனர்.வாசகர் கருத்து (20)

 • sankaseshan - mumbai,இந்தியா

  தேதிமுக பாமகா இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை பெட்டிவாங்கியே பொழைப்பு நடத்தியவர்கள் இரண்டுமே குடும்ப கட்சிகள் மக்கள் இருவரையும் ஒதுக்கி வைக்க வேண்டும்

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  திமுகவுக்கும் பாமகவுக்கும் ஒரு ஒற்றுமை மூன்று ஒற்றுமையில் வேற்றுமை .... ஒற்றுமை: 1) இரண்டும் குடும்ப அரசியல் கட்சிகள் ... குடும்பத்திலே இருக்கிறவங்க மட்டுந்தான் தலைமை பதவிக்கு வரமுடியும் ... ஒற்றுமையில் வேற்றுமை: 1) மத்திய அரசில் இருந்த ரெண்டு கட்சியும் ஊழல் பேர்வழிகள் ,,, ஆனால் திமுக பண்றது தெரியாது, பாமக பண்றது தெரியும் .... 2) ரெண்டும் சாதி வெறி பிடிச்ச கட்சிகள் .... திமுகவோடு வெறி தெரியாது ... பாமகவோடது அப்பட்டமா தெரியும் ..... 3) பாமக, கட்சி ஆளுங்களை வெச்சு மரத்தை வெட்டுவாங்க, ரயில் மேல கல்லடிப்பாங்க ...திமுக காசு, பிரியாணி, குவார்ட்டர் குடுத்து ஆளுங்களை பிடிச்சு அதே வேலையை பண்ணுவாங்க ..........

 • venugopal s -

  பாவம் அன்புமணி ராமதாஸ், இவர் கட்சியில் நாலஞ்சு எம்எல்ஏக்கள் இருந்திருந்தாலாவது பாஜக நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள்.ஒன்றுமே இல்லையே!

 • Tamil - Trichy,இந்தியா

  பா மா கா ஒரு அரசியல் வியாபாரி என்பதை வன்னியர்கள்கூட தெளிவாக புரிந்துகொண்டதன் விளைவு இன்று உங்களுக்கு இந்த நிலைமை. அரசியல் வியாபாரத்தை மூட்டை கட்டிவிட்டு அப்பா மகன் இருவரும் மக்கலுக்கு இலவச வைத்தியம் பார்த்து வன்னியர்களுக்கு செய்த பாவத்தை சரி செய்த்துக்கொள்ளுங்கள்.

 • vadivelu - thenkaasi,இந்தியா

  பா மா கா தி மு வுடன் சேர்ந்து 2024ல் போட்டி இட்டால் தி மு க நான்கு இடங்களை இழக்க நேரிடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்