ADVERTISEMENT
திருவாரூர், குடவாசல் அருகே, கல்விக் கடன் கேட்டு, தனியார் வங்கி மேலாளரை, துப்பாக்கியை காட்டி மிரட்டிய 'சாமியார்' கைதுசெய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, மூலங்குடியைச் சேர்ந்தவர் சாமியார் திருமலை, 55. இவருக்கு, அனுசுயா, 50, என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.
இதில், மூத்த மகள், சீனாவில் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையில், திருமலைக்கு கணக்கு உள்ளது.இந்த வங்கியில், மூத்த மகளுக்கும் கணக்கு உள்ளது.
கடந்த வாரம், திருமலை வங்கிக்கு சென்றுள்ளார். மூத்த மகளுக்கு கல்வி கடன் வேண்டும் என, மேலாளர் முத்துசாமியிடம் கேட்டுள்ளார். நேற்று மாலை, 4:00 மணிக்கு மீண்டும் வங்கிக்கு சென்று, திருமலை கல்வி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு மேலாளர், பிணையம் கேட்டு உள்ளார். ஆத்திரமடைந்த சாமியார், கையில் வைத்திருந்த துப்பாக்கியை காண்பித்து, இது தான் பிணையம் எனக்கூறி, மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மேலாளர் மற்றும் ஊழியர்கள், குடவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வழக்கு பதிந்த போலீசார், சாமியார் வீட்டிற்கு சென்று, அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (3)
பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று சொல்ல வருகிறார் போல!
அட விடுங்கப்பா அந்த ஆள் பி.ஜே.பி. இல்லனா ஆர்.எஸ்.எஸ் சா இருக்கும் இத போய் பெருசு படுத்திக்கிட்டு.. அங்க யாருப்பா போறாது?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
மனைவி மகள் குடும்பம். அப்படீன்னா பாலைவன மத சாமியாரா? இந்து சாமியார்கள் குடும்பத்தைத் துறந்தவர்கள். இவன் இந்துவாக இருந்தால் சாமியார் அடைமொழி தவறு. போலி சாமியார் என்பது சரி.