Load Image
dinamalar telegram
Advertisement

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பா.ஜ.,வில் இணைந்தார்

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், தனது கட்சியை பா.ஜ., உடன் இணைத்ததுடன் தானும் கட்சியில் இணைந்தார்.


பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், சட்டசபை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பதவி விலகியதுடன், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் பாட்டியாலா தொகுதில் போட்டியிட்ட அமரீந்தர் உட்பட அவரது கட்சியினர் அனைவரும் தோல்வியடைந்தனர். இதன் பின்னர் சிறிது காலம் ஓய்வில் இருந்த அமரீந்தர் சிங் சமீபத்தில், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
Latest Tamil News

இந்த நிலையில் அமரீந்தர் சிங் பா.ஜ.,வில் இணையவுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி, இன்று (செப்.,19) தனது கட்சியை பா.ஜ., உடன் இணைத்துவிட்டு, மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரன் ரிஜூ, பா.ஜ., தலைவர் சுனில் ஜகார், பஞ்சாப் பா.ஜ., தலைவர் அஸ்வனி சர்மா ஆகியோர் முன்னிலையில் அமரீந்தர் சிங் பா.ஜ.,வில் இணைந்தார். முன்னதாக காலையில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த அமரீந்தர் சிங், பா.ஜ.,வில் சேர வாழ்த்து பெற்றார்.


வாசகர் கருத்து (23)

  • பிரபு - மதுரை,இந்தியா

    "தேர்தலில் போட்டியிட்ட அமரீந்தர் உட்பட அவரது கட்சியினர் அனைவரும் தோல்வியடைந்தனர்" - அடுத்தது என்ன? பா.ஜ.,வில் இணைந்தார். இவருக்கு எந்த கொள்கையும் இல்லை.

  • sankaseshan - mumbai,இந்தியா

    அதிமுகவிகிருந்து திமுகவுக்குபோனாலும் திமுகவிலிருந்துஅதிமுகவுக்கு வந்தாலும்கழுதை கெட்டா குட்டிசுவர் Maathirithaan

  • enkeyem - sathy,இந்தியா

    குடும்ப கட்சி அடிமைகள் கதறலோ கதறல்.

  • venugopal s -

    கெட்டும் பட்டணம் சேர், இது பழைய பழமொழி.கெட்டும் பாஜகவில் சேர்,இது புது பழமொழி.

  • Mukundan - Chennai,இந்தியா

    இந்த பொறுக்கல் இன்னும் தொடரும்....தேவையில்லாத கழிவுகள் எங்காவது ஒரு இடத்திற்கு செல்லவேண்டும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்