பன்றி காய்ச்சலை மறைப்பது வேதனை : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
@1brபுதுக்கோட்டை : ''தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு அதை மறைப்பது வேதனையாக உள்ளது'' என சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில்அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. தமிழக அரசு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மறைப்பது வேதனையாக உள்ளது.சென்னை எழும்பூர் மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகமானோர் வருகின்றனர்.இது தவிர 'டெங்கு' உள்ளிட்ட பல்வேறு வகை காய்ச்சலும் பரவி வருகிறது. தமிழக அரசு உடனடியாக வல்லுனர் குழுவை அமைத்து ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் மருந்து மற்றும் மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களே தெரிவிக்கின்றனர்.அமைச்சர் அதை மறுப்பதை விடுத்து மக்கள் நலன் கருதி உடனடியாக மருந்து மாத்திரைகள்கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தீர்வு அல்ல. காய்ச்சல் பரவுவதை பொறுத்து முடிவு செய்யலாம். உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனைகள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் காய்ச்சல் வார்டு துவக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!