மாஜி அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு தேவையற்றது என்கிறார் காங்., - எம்.பி.,
திருப்புத்துார்-''முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், 'ரெய்டு' நடத்துவது தேவையற்றது. முறையாக, 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் பெற்று சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்,'' என, காங்., - எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், சேவினிபட்டியில் கார்த்தி எம்.பி., கூறியதாவது:தமிழக மின் வாரியத்திற்கு, 1 லட்சத்து, 28 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதை சரி செய்ய ஆக்கப்பூர்வமான தீர்வு காண வேண்டும். அதற்காக மின் கட்டண உயர்வு தீர்வாகாது.ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அதை பொது இடங்களில் பேசி சர்ச்சை ஆக்குவது தேவையற்றது.

ஹிந்துக்கள் குறித்து ராஜா பேசிய கருத்தால், வருத்தத்தில் உள்ள மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது.ஆக்கப்பூர்வமான விஷயங்களை பேச, தமிழகத்தில் களம் இல்லாமல் போய்விட்டது. முன்னாள் காங்., தலைவர் ராகுல் யாத்திரைக்கு வரவேற்பு உள்ளது. இது கட்சியை ஒன்றிணைக்கிறது. இந்த பாதயாத்திரை இந்தியாவிற்கும் வலு சேர்க்கும்.முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், 'ரெய்டு' நடத்துவது தேவையற்றது.
முறையாக, 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் பெற்று சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். கள்ளக்கடத்தல் போன்ற வழக்குகளில் ரெய்டு நடத்தலாம்.காங்கிரசை தவிர்த்து, பிற மாநில கட்சிகள் சிறப்பான கூட்டணியை அமைக்க முடியாது. நாட்டில் பா.ஜ.,வை எதிர்க்க ஆக்கப்பூர்வமான கூட்டணிக்கு அச்சாணியாக காங்., தான் இருக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (4)
நீயல்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு அரசு உள்ளதே என்ற கவலை எங்களுக்கு .
கரெக்ட். வீடுகளில் பணத்தையோ ஆவணங்களையோ வைத்திருக்கும் அளவுக்கு யாரும் முட்டாள் இல்லை.
இவர் என்ன சொல்ல வருகிறார்? அரசியல்வாதிகளையும், ஊழல்களையும் பிரிக்கவே முடியாது. அதனால் ரெய்டு செய்து நேரத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் விரயம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறாரா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அடிச்ச 🧐 நோட்டெல்லாம் கொப்பாரு எங்கன வச்சுருக்காரு. அதை பேசு ராசா. சமீப காலமாக ஒரு மிடில் பேச்சு பேசுரே. நீ என்ன பேச்சு பேசினாலும். உங்க வெளிநாட்டு சொத்து விபரங்களை ஆதாரங்களுடன் 💆 பிடித்து திகாரில் அடைப்பது உறுதி.