Load Image
Advertisement

ஹைதராபாத் விடுதலை தினத்தை புறக்கணித்த ஆட்சியாளர்கள்: அமித்ஷா சாடல்

Tamil News
ADVERTISEMENT


ஹைதராபாத்: தேசம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக இங்கு ஆட்சி செய்தவர்கள், ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட தயாராக இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.


நாடு சுதந்திரம் அடைந்த பின், பல சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவானது. நிஜாம் ஆட்சியாளர்கள் வசம் இருந்த ஹைதராபாத், 1948 செப்., 17ல் இந்தியாவுடன் இணைந்தது. இதை ஹைதராபாத் விடுதலை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றனர். இந்தாண்டு பா.ஜ.,வும் இந்த விஷயத்தை கையில் எடுத்து, 'ஹைதராபாத் விடுதலை தினம்' என்ற பெயரில் மாநிலம் முழுதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று ஹைதராபாத் வந்தார். செகந்திராபாதில் உள்ள ராணுவ மைதானத்தில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: நாடு 1947 ல் சுதந்திரம் பெற்றாலும், ஹைதராபாத்தை நிஜாம்கள் ஆட்சி செய்தனர். 13 மாதங்கள் நிஜாம்களின் அடியாட்களுக்கு மக்கள் பயப்பட்டு வந்தனர். ஹைதராபாத் விடுதலை தினத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும் என மக்கள் விரும்பினர்.
Latest Tamil News

அந்த தினத்தை கொண்டாடுவதாக பல அரசியல் கட்சிகள் உறுதி அளித்தன. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாடுவதில்லை. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகியும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக, இந்த பகுதியை ஆட்சி செய்தவர்கள், கொண்டாட தயாராகவில்லை.

Tamil News
Tamil News

தெலுங்கானா, ஹைதராபாத் - கர்நாடகா, மரத்வாடா மக்கள், இந்த பகுதியில் இருந்த கொடுமைக்காரர்களின் அட்டூழியத்திற்கு எதிராகவும், இந்தியாவுடன் சேர்வதற்கும் தைரியமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த பகுதியை ஆள்பவர்கள் பயம் காரணமாக ஹைதராபாத் விடுதலை தினமாக கொண்டாடாமல் வேறு பெயரில் கொண்டாடுவார்கள். உங்கள் மனதில் இருந்து பயத்தை அகற்றுங்கள் என உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டதால், மக்களை கொடுமை படுத்தியவர்கள் இனிமேல், நாட்டிற்காக முடிவெடுக்க முடியாது.

Latest Tamil News
தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட முடிவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


வாசகர் கருத்து (18)

  • Viswam - Mumbai,இந்தியா

    போர்த்துகியர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட கோவா டிசம்பர் பத்தொன்பதையும் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பாண்டிச்சேரிக்கு நவம்பர் ஒன்றிலும் விடுதலை தினம் உள்ளபோது மூரக்ஸ் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஹைதராபாதை செப்டம்பர் பதினேழில் கொண்டாடுவதில் என்ன குறை ? ஒவாய்சியும் காங்கிரஸும் இதை துக்க நாளாக கொண்டாடாத குறையாக நடத்தியுள்ளார்கள் என்றால் இந்திய இறையாண்மைக்கு எதிராக மூர்க்க மத ஒட்டு வாங்குவது தான் முதன்மையாக குறிக்கோளாக இருந்திருக்கிறது என்று அர்த்தம். கொஞ்சமாவது இந்திய உணர்வுள்ளவர்கள் இதை ஆதரிப்பார்கள். மற்றவர்களுக்கெல்லாம் பாஜக மேலுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி எல்லை மீறி தேசியத்தையும் மிதிக்கும் அளவிற்கு சென்றுள்ளது வருத்தமே. முதலில் வருவது ஒன்றாக இணைந்த பாரதம் என்று என்றைக்கு மனதில் வருகிறதோ அன்று நாம் சிறப்பாக முன்னேறுவோம்

  • அப்புசாமி -

    பட்டேல் 576 சமஸ்தானங்களை விடுவிச்சு இந்தியாவை உருவாக்கினார். நீங்கள்ளாம் அதுக்காக விழாவா எடுத்தீர்கள்? எத்தனை சமஸ்தானங்களுக்கு எடுத்தீர்கள்? திடீர்னு இப்போ எதுக்கு இந்த ஓட்டு பொருக்கும் அரசியல்?

  • Mukundan - Chennai,இந்தியா

    என்ன உருட்டினாலும் அடுத்த தேர்தலில் ஆப்பு வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

  • Mukundan - Chennai,இந்தியா

    என்னென்னவோ உருட்டுது....

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    மத்திய அரசை மாநில அரசுகள் மட்டம் தட்டுவதும்,புறக்கணிக்கும் எண்ணிக்கையம் அதிகம் ஆகி உள்ளான். அங்கே ஆளுநர் ஆட்சியை கொண்டு வர வேண்டும்.,தமிழகம்,தெலுங்கானா,பெங்கால் ,ஆந்திராவில் ஆளுநர் ஆட்சி வர வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement