இதுகுறித்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீரிழிவு குறைபாடு கொண்டவர்களுக்கு 'சிட்டாகிளிப்டின்' 50 மில்லி கிராம் கொண்ட 10 மாத்திரை 60 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாத்திரை 100 மி.கி., 10 மாத்திரை 100 ரூபாய்க்கு கிடைக்கும்.

நீரிழிவு குறைபாடு உடையோர் தற்போது, 162 முதல் 258 ரூபாய் வரை செலவு செய்து 10 மாத்திரைகள் வாங்குகின்றனர்.இந்த மலிவு விலை மாத்திரைகள், பிரதமர் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும்.
நாடு முழுதும் 8,700 இடங்களில் செயல்படும் இந்த மருந்தகங்களில், மலிவு விலையில் 1,600க்கும் மேற்பட்ட தரமான மருந்துகள், 250 மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு, ஒரு சானிட்டரி நாப்கின் ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (21)
விலை கம்மியாக இருந்தாலும் தரம் ,சில மாத்திரைகள்,அவ்வளவு நன்றாக இல்லை. பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. என் அனுபவம்.
நீரிழிவு மாத்திரைகள் ஏற்கனவே மார்க்கெட்டில் இதைவிட மலிவான விலையில் கிடைக்கிறது.நான் உபயோகிக்கும் கிளைகோமெட் 500மி.கி. பத்து மாத்திரைகள் அடங்கிய ஒரு ஸ்டிரிப் வெறும் 16.80 ரூபாய்க்கு எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது.இது பாஜகவின் மற்றும் மோடியின் வெறும் விளம்பர ஸ்டண்ட், அவ்வளவுதான்!
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் , மத்திய அரசின் இந்த மருந்தகம் ஏறக்குறைய 2 வருடங்களுக்கு முன்பே நடைமுறைக்கு வந்து விட்டது.எனக்கு BP க்கு மருத்துவர் எழுதி கொடுத்த சீட்டை காண்பித்து இங்கு மாத்திரை வாங்கியஉடன்தான் தெரிந்தது மற்ற கடைகளை விட 40 டு 45 சதவிகிதம் விலை குறைவு. முதலில் வாங்கியது பத்து மாத்திரை ரூ 99.75. ஆனால் மத்திய அரசு திட்டத்தின் கீழ் இயங்கும் இந்த கடையில் பத்து மாத்திரைகள் ரூ . 31.80 தான் இதற்கென்று ஒரு மொபைல் ஆப் இருக்கிறது . இதில் அனைத்து விதமான தகவலும் கிடைக்கும் .உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடையின் விலாசம் , தொலைபேசி நம்பர் மருந்துகளின் விலை பட்டியல் போகின்ற தகவல்கள் அருமையாக இருக்கிறது
நான் ஒரு சீனியர் சிட்டிசன்.முன்பு மாதத்திற்கு ரூ.1000 மருந்திற்காக செலவு செய்தேன். இப்போது கடந்த மூன்று வருடங்களாக மக்கள் மருந்தகத்தில் மருந்து வாங்குகிறேன். எனது மாத செலவு ரூ.200 மட்டுமே. பிரதமர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
அரசு சற்று வித்தியாசத்துடன் இதை அணுக வேண்டும் . வியாதி வருவதற்கு முன் செய்யவேண்டியவைகளை மத்திய சுகாதார துறை செய்ய வேண்டும் . இவை பெரும்பாலும் இனியனாவை ஆட்டி படைக்கிறது . இதற்கு முழு முதற் காரணம் நமது உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மனம் . கார்போஹட்ரேட்டை குறைத்து புரோட்டீன் மற்றும் வைட்டமின் உள்ள உணவுகளை அதிகரிக்கும் வைகளை ஆராய வேண்டும் . மேலும் உடற்பயிற்சியை ஊக்கு விக்க வேண்டும் . இது தனி மனித கடமை என்று தவிர்க்காமல் எப்படி இதை சரி செய்ய வேண்டும் என அரசு முயற்சி செய்ய வேண்டும் .குழந்தை முதல் ஆரம்பிக்க வேண்டும் . வருவதற்கு முன் சரி செய்வதே சரியாக இருக்க முடியும்