Load Image
dinamalar telegram
Advertisement

தொற்று நோயை தடுக்க என்ன நடவடிக்கை; ஒன்றிய கூட்டத்தில் கேள்வி




திருமங்கலம் : 'மழைக்காலம் நெருங்குவதால் தொற்றுநோயை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என திருமங்கலம் ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் லதா தலைமை வகித்தார். துணைத்தலைவர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் கைலாசம், இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கிராமங்களில் வளர்ச்சி திட்டங்கள் குறித்த விவாதம் நடந்தது.



செக்கானூரணி ஆட்டுச் சந்தை ஏலம் குறித்த விவாதத்தின் போது, இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், 'முதலில் ஆட்டுச் சந்தையை ஏலம் எடுக்க முன்வர வேண்டும். பின்னர் அதனுடைய குறைகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்' என்றனர்.பா.ஜ., கவுன்சிலர் ஓம்ஸ்ரீமுருகன் பேசும் போது, ''ஊத்துப்பட்டி அரசு துவக்கப்பள்ளி கூரை கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி கான்கிரீட் கூரை அமைக்க வேண்டும்'' என்றார். 'இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


'மழைக்காலம் தொடங்க உள்ளதால் தொற்று நோய்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்பதை தெரிவிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, 'விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என பி.டி.ஓ., சங்கர் கைலாசம் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement