ADVERTISEMENT
புதுடில்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், வரும் திங்கட்கிழமை பா.ஜ.,வில் இணைய உள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், சட்டசபை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பதவி விலகியதுடன், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி பா.ஜ.,உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் தோல்வி தான் கிடைத்தது.

இதன் பின்னர் சிறிது காலம் ஓய்வில் இருந்த அமரீந்தர் சிங் சமீபத்தில், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். தேச பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக அமரீந்தர் சிங் கூறியிருந்தார்.
இந்நிலையில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரித்பால் சிங் பலியவால் கூறுகையில், வரும் திங்கட்கிழமை(செப்.,19) அமரீந்தர் சிங், தனது கட்சியை பா.ஜ., உடன் இணைத்து விட்டு, அக்கட்சியில் இணைய உள்ளதாக கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (18)
கேப்டன் அமரீந்தர் சிங் இதை பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே செய்து இருக்கலாம்.
அருமை.நல்ல முடிவு.இங்கே அடிமைகள் கிடையாது. முன்னேற்றம் உண்டு.
சின்ன ஜீயும் பெரிய ஜீயும் சேர்ந்து இவரை புனிதர் ஆக்கிட்டாங்க.. போப்புக்கு அப்புறம் இவங்க செண்டு பேரு தான் டாப்பு..
ஹா ஹா ஹா.. சர்தார்ஜி - சோட்டா ஜீ பார்ட்னர்ஷிப்பில் ஆரம்பித்த கடையிலே ஈ மொய்க்க ஆரம்பிச்சிட்டது. அதனாலே முழுதாக சாக் - கடையிலே ஐக்கியம் ஆயிட்டாப்புலே. காஷ்மீரிலேயும் இப்போ ஒரு புதுக்கக்கடையை சின்ன ஜீ தொறக்க வெச்சிருக்காரு. அது தேர்தலுக்கு முன்பேயே மூடுவிழா கண்டுவிடும். கழண்டு விடும்..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வேறு எங்கு ?