சென்னை: ஆவின் நிறுவனத்தின் இனிப்பு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பால், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இனிப்பு வகைகளுக்கும் விலை அதிகரிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலை விவரம்:
* 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.45 லிருந்து ரூ. 50 ஆக உயர்வு
* 250 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.80 லிருந்து ரூ. 100 ஆக உயர்வு
* 200 கிராம் ரசகுல்லா விலை ரூ.80 லிருந்து ரூ.90 ஆக உயர்வு
* 100 கிராம் பால்கோவா விலை ரூ.47 லிருந்து ரூ.55 ஆக உயர்வு
* 250 கிராம் பால்கோவா விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்வு
* 250 கிராம் மைசூர்பாகு விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்வு
* 500 கிராம் மைசூர்பாகு விலை ரூ.230 லிருந்து ரூ.270 ஆக உயர்வு
கடந்த ஜூலை மாதம் ஆவின் பொருட்களின் பால் மற்றும் தயிரின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் இனிப்பு பொருட்களின் விலையும் உயர்த்தி இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து (12)
தீபாவளிக்கு அரசு நிறுவனத்திற்கு ஆவின் இனிப்புக்கள் விலை கூடுதலாக இருப்பதால் தனியாரிடம் வாங்குவதற்கு இதை சாக்காக வைத்து விஞ்ஞான ஊழல் இப்போது பக்கா பிளான் போட்டு விட்டார்கள். போன வருட தீபாவளிக்கு திமுக அரசு பல்பு வாங்கியது போல் இந்த வருடம் தீபாவளிக்கு இருக்க கூடாது என்ற பயம்தான்.
ஓட்டு போட்டீங்கல்ல காசு வாங்கிகிட்டு ? அனுபவிங்க.
இனிபு சாப்புடுவரை குறையுங்க. பின்னாடி சர்க்கரை நோய் , கொலஸ்டிரால் இல்லாம ஆரோக்கியமா வாழுங்க.
ஆயுத பூஜை, தீபாவளி பரிசு.
ஆவின் ஊழலில் திமுக ஆட்சி இழக்கும். ஜி எஸ் டி மேல திமுக ஏன் இன்னும் பழி போடவில்லை?